இது ஏடாகூடமாச்சே.. ராம் கோபால் வர்மாவை கல்யாணம் பண்ணிக்க ஆசையாம்.. பரபரப்பை கிளப்பிய நடிகை!
ஹைதராபாத்: சர்ச்சை இயக்குநர் என்று பெயர் பெற்றுள்ள இயக்குநர் ராம் கோபால் வர்மாவை கல்யாணம் பண்ணிக்க ஆசை என நடிகை காயத்ரி குப்தா தெரிவித்துள்ளார்.
சூர்யாவின் ரத்த சரித்திரம், வீரப்பன், லக்ஷ்மி என்.டி.ஆர் உள்ளிட்ட பல சர்ச்சை படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா.
அவரது படங்கள் மட்டுமின்றி, அவரது பேச்சுக்களும், பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.

படுக்கைக்கு அழைக்கிறாங்க
ஐஸ் க்ரீம் 2, மித்தாய், அமர் அக்பர் அந்தோனி மற்றும் ஃபிடா உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை காயத்ரி குப்தா, கடந்த 2017ம் ஆண்டு, சினிமா வாய்ப்புத் தேடி சென்றால், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் படுக்கையை பகிர சொல்றாங்க என வெளிப்படையாக பேசி வைரலானார்.

சாய் பல்லவி படம்
சேகர் கமூலா இயக்கத்தில், சாய் பல்லவி, வருண் தேஜ் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான ஃபிடா படத்தில், சாய் பல்லவியின் தோழியாக காயத்ரி குப்தா நடித்திருந்தார். அந்த படத்தில், அவரது சிறப்பான நடிப்பை பலரும் பாராட்டி இருந்தனர். ராம் கோபால் வர்மாவின் ஐஸ் க்ரீம் 2 படத்திலும் காயத்ரி நடித்துள்ளார்.

சர்ச்சையான ஹக்
அகஸ்தியா மஞ்சு மற்றும் ராம் கோபால் வர்மா இணைந்து இயக்கிய பியூட்டிஃபுல் படம் கடந்த டிசம்பர் மாதம் திரைக்கு வந்தது. இந்த படத்தில், சின்ன ரோலில் நடித்த காயத்ரி குப்தா, சமீபத்தில், நடைபெற்ற படத்தின் வெற்றி விழாவில், ராம் கோபால் வர்மாவை கட்டிப்பிடித்த வீடியோ வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியது.

கல்யாணம் பண்ணிக்க ஆசை
இந்நிலையில், சமீபத்தில் ஒரு இணையதளத்துக்கு, காயத்ரி குப்தா அளித்த பேட்டியில், அந்த ஹக் சாதாரணமாக கொடுத்தது தான். ஆனால், வைரலாக்கப்பட்டது. ராம் கோபால் வர்மா சாரின் உழைப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும், அவருக்கு மட்டும், வயசு இன்னும் கொஞ்சம் கம்மியா இருந்தா, நானே அவரை கல்யாணம் பண்ணியிருப்பேன் என பேசியது சர்ச்சையாகி உள்ளது.

பேத்தி பிறந்த நேரம்
பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் மகள் ரேவதிக்கு இந்த மாதம் அமெரிக்காவில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ராம் கோபால் வர்மா, தாத்தா ஆகியுள்ள நிலையில், அவரை சுற்றி, கட்டிப்பிடி வீடியோக்களும், கல்யாண செய்திகளும் வலம் வருகின்றன. சர்ச்சை இயக்குநருக்கே சங்கடம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











