ஐஸ்வர்யா ராய் சந்தோஷ் சுப்ரமணியம் பிரகாஷ் ராஜ் போன்றவரா?
Recommended Video

மும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
எத்தனையோ பேர் உலக அழகி பட்டம் பெற்றாலும் ஐஸ்வர்யா ராய்க்கு மட்டும் தனிச் சிறப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு, ஏன் தற்போதும் கூட சில ஆண்கள் திருமணத்திற்கு பெண் தேடும் போது ஐஸ்வர்யா ராய் மாதிரி பெண் வேண்டும் என்றார்கள், என்கிறார்கள்.
தான் அழகி என்று பெருமைப்படும் பெண்ணை பார்த்தால் ஆமா, பெரிய ஐஸ்வர்யா ராய்னு நினைப்பு என்று பலர் கூறியுள்ளனர். அழகே பார்த்து பொறாமைப்படும் அழகி ஐஸ்வர்யா இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கணவர், மகளுடன் கோவாவில் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

வெற்றி
உலக அழகிப் பட்டம் வென்ற பிறகு நடிகை அவதாரம் எடுத்த ஐஸ்வர்யா ராய் முன்னணி நடிகையானார். குழந்தை பிறந்த பிறகு மகள் ஆராத்யாவுக்காக அவ்வளவாக படங்களில் நடிப்பது இல்லை. மகளின் அருகிலேயே இருந்து பார்த்து பார்த்து வளர்க்க வேண்டும் என்பதால் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

அம்மா
ஐஸ்வர்யா ராய் எங்கு சென்றாலும் ஆராத்யாவின் கையை பிடித்துக் கொண்டே செல்கிறார். ஆராத்யாவை அவரின் அப்பா, தாத்தா, பாட்டியுடன் பார்த்ததை விட ஐஸ்வர்யாவுடன் தான் அதிகம் பார்த்துள்ளனர். ஐஸ்வர்யா தனது மகளுக்கு சுதந்திரம் அளிக்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அதாவது சந்தோஷ் சுப்ரமணியம் படம் பிரகாஷ் ராஜ் போன்று நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை எல்லாம் ஐஸ்வர்யா கண்டுகொள்ளவில்லை.

சினிமா
ஐஸ்வர்யா தனது மகளை தன் வழியில் நடிகையாக்கிப் பார்க்க விரும்பவில்லை. ஆராத்யாவுக்கு எது விருப்பமோ அப்படியே செய்யட்டும் என்கிறார். ஆராத்யாவை பிற குழந்தைகள் போன்று சாதாரணமாக வளர்க்க விரும்புகிறார். மீடியாக்களின் கண்ணில் இருந்து மகளை தள்ளியே வைக்க விரும்புகிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா
தன்னை கிண்டல் செய்பவர்களை ஐஸ்வர்யா எப்பொழுதுமே கண்டுகொள்வது இல்லை. ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா வெயிட் போட்டது ஒரு பெரிய விஷயமாக அனைவரும் பேசினார்கள். அதற்கு ஐஸ்வர்யாவோ, நான் ஒரு தாய், நான் இப்படித் தான். வெயிட் போட்டதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் சைஸ் ஜீரோவை எப்பொழுதுமே ஊக்குவித்தது இல்லை. நான் இதுவரை டயட்டில் இருந்தது இல்லை என்றார்.

சினிமா
ஐஸ்வர்யா ராயை நடிகையாக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுடன், முயற்சி செய்து வெற்றியும் கண்டவர் பாலிவுட் இயக்குனர் யஷ் சோப்ரா. இரண்டு ஆண்டுகளாக ஐஸ்வர்யா ராயுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை நடிகையாக்கினார். யஷ் சோப்ரா முயற்சி செய்யாவிட்டால் ஐஸ்வர்யா நடிகையாகியிருக்கி மாட்டார்.


Click it and Unblock the Notifications











