Don't Miss!
- News
டெல்லிக்கு பறக்கும் ‘இன்புட்ஸ்’.. பல ஆங்கிள்கள்.. பின்வாங்கும் பாஜக? மூத்த பத்திரிகையாளர் ‘பளிச்’!
- Sports
உலக கோப்பை ஹாக்கி.. 3வது முறையாக ஜெர்மனி சாம்பியன்.. பரபரப்பான டிவிஸ்டில் நடந்த இறுதிப் போட்டி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Automobiles
ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா! எப்புட்றா என மண்டையை சொறியும் போட்டி நிறுவனங்கள்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க பழச்சாறு குடிப்பவரா நீங்கள்? இனிமே அந்த தப்ப பண்ணாதீங்க...!
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
மீண்டும் தலைதூக்கும் கொரோனா... நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதி !
மும்பை : பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மகராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து உள்ளது. குறிப்பாக தலைநகர் மும்பையில் அதிகளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மும்பையில் நேற்று ஒரே நாளில் 763 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் மும்பையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 735 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிதாக யாரும் கொரோனாவால் உயிரிழக்க வில்லை.

பாலிவுட் நடிகர்களில் மிகவும் பிரபலமான நடிகரான ஷாரூக்கான் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, ஷாருக்கான் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஷாருக்கான் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இருதினங்களுக்கு முன் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படத்தில் டிரைலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ந் தேதி வெளியாக உள்ள நிலையில் ஷாருக்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அட்லீ மிகவும் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
8
ஆண்டுகளுக்கு
முன்பே
தன்னுடைய
வில்லன்
கேரக்டர்
குறித்து
கணித்த
சூர்யா..
ஆனாலும்
கண்டீஷன்
இருக்காம்!
நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் பதான் திரைப்படம் ஜனவரி 2023ல் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்துள்ளனர். இதேபோல், ராஜ்குமார் ஹிரானியின் பன்கி படம் குறித்து அறிவிக்கப்பட்டது. அப்படத்தில் ஷாருக்கானுடன் டாப்ஸி நடிக்க உள்ளார். இந்த படம் டிசம்பர் 2023-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.