»   »  பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடித்துக் கொண்ட பிரபலங்கள்!

பிளாஷ்பேக் 2014: காதலை முறித்து.. கல்யாண உறவை முடித்துக் கொண்ட பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாலிவுட் உலகத்தில் கிளாமர் மட்டுமல்லாது பரபரப்புகளுக்கும் பஞ்சமிருக்காது. பலர் இணைவார்கள். பலர் இணைகளைப் பிரிவார்கள்.

மற்ற ஆண்டுகளைப் போலவே இந்தாண்டும் காதல், திருமணம் போன்ற சந்தோஷ தருணங்களைப் போலவே, விவாவகரத்து காதல் முறிவு போன்றவைகளும் காணப்பட்டன.

இதோ, இந்தாண்டு பிரிந்து சென்ற பாலிவுட் ஜோடிகள் குறித்த ஒரு பார்வை...

ஹிருத்திக் - சூசன்னே ...

ஹிருத்திக் - சூசன்னே ...

பல ஆண்டுகளாகக் காதலித்து திருமணம் செய்து கொண்டது இந்த ஜோடி. 13 காலம் இணைந்து வாழ்ந்த இந்தத் தம்பதி இந்தாண்டு அதிகாரப்பூர்வமாக விவாகரத்து மூலம் பிரிந்தனர். இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்து கொண்டு பிரிந்து போனார்கள். உண்மையில் ரோஷனை விட சூசன்னேதான் அவரை விட்டுப் பிரிந்து போக முதலில் முடிவு செய்தார். இதை ரோஷனே தெரிவித்திருந்தார். இரு தரப்பு குடும்பங்களும் இவர்களை சேர்த்து வைக்க முயன்றனர். ஆனால் சூசன்னே பிடிவாதத்தால் அது தோல்வியிலேயே முடிந்தது.

கரன் சிங் குரோவர் - ஜெனீபர் விங்கட்...

கரன் சிங் குரோவர் - ஜெனீபர் விங்கட்...

அதேபோல கரன் சிங் குரோவரும், ஜெனீபர் விங்கட்டும் பிரிந்து போனார்கள். இது காதல் ஜோடியாகும். தானும், தனது மனைவியும் கசப்புணர்வுடன் இருப்பதாக வந்த செய்திகள் உண்மைதான் என்று குரோவர் கூறியிருந்தார்.

பிபாஷா பாசு - ஹர்மன் பவேஜா...

பிபாஷா பாசு - ஹர்மன் பவேஜா...

ஹர்மன் பவேஜாவுக்கும் தனக்கும் இடையே விரிசல் விழுந்திருப்பதாக பிபாஷா பாசு இந்த ஆண்டு அறிவித்தார். இருவரும் சேர்ந்து இதை கூட்டறிக்கையாகவும் வெளியிட்டனர். இரண்டு வருடக் காதல் இது. வெளிநாட்டு மாடல் அழகி மீது பவேஜாவின் பார்வை விழுந்ததே பிபாஷாவின் பிரிவுக்குக் காரணம் என்கிறார்கள். அதேமயம் கரன் குரோவர் மீது பிபாஷா பாசப் பார்வை பார்த்ததே பவேஜா பிரிந்து போகக் காரணம் என்றும் தகவல்கள் வெளியாகின.

பூஜா பட் - மனீஷ் மகிஜா...

பூஜா பட் - மனீஷ் மகிஜா...

பிரபல நடிகையாக வலம் வந்தவரான பூஜா பட்டும், அவரது கணவர் மனீஷ் மகிஜாவும் 11 வருட கால தாம்பத்தியத்தை முடிவுக்குக் கொண்டு வந்தனர். இருவரும் 2003ம் ஆண்டு திருமணம் செய்தவர்கள். டிவிட்டர் மூலம் தனது கணவரைப் பிரிந்ததை அறிவி்ததார் பூஜா.

மேலும் பல ஜோடிகள்...

மேலும் பல ஜோடிகள்...

இவர்கள் தவிர அர்மான் - தனிஷா, கெளஹர் - குஷால் ஆகிய காதல் ஜோடிகளும் இந்த ஆண்டு பிரிந்தனர்.

டிம்பி கங்குலி...

டிம்பி கங்குலி...

அதேபோல ரியாலிட்டி ஷோ ஜோடியான டிம்பி கங்குலி, ராகுல் மகாஜன் ஆகியோரும் தனித் தனியே நடை போட்டனர்.

English summary
Bollywood is all about glamour, glitz and all kinds of razzle-dazzle. However, somewhere behind the starry lives of our very own industrywalas, there lie shrimp harsh realities of the world. And when such hard lives of celebs come out in open, they sure become news. While this year remained dedicated to many lavish celebrity weddings, many heart clenching celebs' breakups also acquired the news space.
Please Wait while comments are loading...