சன்னியுடன் நடிச்ச, சங்க அறுத்துருவேன்: நடிகர்களை மிரட்டும் மனைவிகள்

By Siva

மும்பை: சன்னி லியோனுடன் சேர்ந்து நடிக்கக் கூடாது என்று பாலிவுட்டின் பெரிய நடிகர்களுக்கு அவர்களின் மனைவிமார்கள் உத்தரவிட்டுள்ளார்களாம்.

வெளிநாட்டில் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். பாலிவுட் படங்களில் நடித்தாலும் கவர்ச்சியான கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைக்கிறது.

மேலும் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இது குறித்து சன்னி கூறியிருப்பதாவது,

நடிகர்கள்

நடிகர்கள்

பாலிவுட் நடிகர்கள் என்னுடன் சேர்ந்து நடிக்க பயப்படுகிறார்கள். காரணம் அவர்களை மனைவிமார்கள் மிரட்டி வைத்துள்ளார்களாம். எனக்கு உங்க புருஷங்க தேவையில்லை என்பதை அவர்களின் மனைவிகளிடம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கணவர்

கணவர்

எனக்கு தங்கமான புருஷன் இருக்கார். அவரை நான் காதலிக்கிறேன். அவர் செக்ஸியானவர். அவர் என் தேவைகள் அனைத்தையும் திருப்திகரமாக பூர்த்தி செய்கிறார். எனக்கு யார் புருஷனும் வேண்டாம்.

வேலை

வேலை

எனக்கு வேலை வேண்டும். அவ்வளவு தான். நான் பணியாற்றும் பல நடிகர்கள் திருமணமானவர்கள். அவர்களின் மனைவிகளை சந்திக்கும்போது எங்களுக்கு இடையே நல்ல நட்பு ஏற்படுகிறது. அப்படி இருந்தும் நடிகர்களின் மனைவிகள் பயப்படுகிறார்கள்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானின் ரயீஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆட வேண்டும் என்று போன் வந்தபோது ராங் நம்பரை அழைத்துவிட்டார்கள் என நினைத்தேன். ஷாருக்கான் என் மீது நம்பிக்கை வைத்து பணியாற்றியதில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார் சன்னி லியோன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X