தளபதி 65 அடுத்த அப்டேட் வந்தாச்சு...விஜய்க்கு வில்லனாக பாலிவுட் ஆக்ஷன் ஹீரோ

சென்னை : விஜய் அடுத்து நடித்து வரும் தளபதி 65 படத்தை நெல்சன் திலீப் குமார் இயக்கி வருகிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை அமெரிக்காவின் ஜார்ஜியாவில் முடித்து விட்டு, சமீபத்தில் தான் விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் சென்னை திரும்பினர்.

இந்த படம் ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் கலந்த கலவையாக இருக்கும் என கூறப்படுகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, அபர்ணா தாஸ், மலையாளம் ஹீரோ டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய்யின் இந்த படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.

சென்னையில் பிரம்மாண்ட செட்

சென்னையில் பிரம்மாண்ட செட்

தளபதி 65 படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக ஷாப்பிங் மால்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், ஷாப்பிங் மால் போன்ற பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் கூறப்பட்டது.

வில்லனாக பாலிவுட் ஹீரோ

வில்லனாக பாலிவுட் ஹீரோ

லேட்டஸ்ட் அப்டேட்டாக, இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க பாலிவுட் ஹீரோ ஜான் ஆப்ரகாமிடம் பேசப்பட்டுள்ளதாம். தூம் 1, ரேஸ் 2, மும்பை சாகா போன்ற பாலிவுட் பிளாக்பஸ்டர் படங்களில் நடித்தவர் ஜான் ஆப்ரகாம். அதிகமானவர்கள் விரும்பும் ஆக்ஷன் ஹீரோ என்பதால் தளபதி 65 ல் அவர் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிவிக்க வாய்ப்பு

விரைவில் அறிவிக்க வாய்ப்பு

இது படக்குழுவிற்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறும் தகவல் மட்டுமே. ஆனால் படக்குழு சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. தளபதி 65 ல் இணைய ஜான் ஆப்ரகாம் ஓகே சொன்ன பிறகு, விரைவில் அடுத்தடுத்த அப்டேட் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended Video

Thala Ajith, Thalapathy Vijay & Tamil Actor, Actress Rare Pictures | Vjs, Suriya | Filmibeat Tamil
படப்பிடிப்பு நிறுத்தப்படுமா

படப்பிடிப்பு நிறுத்தப்படுமா

தற்போது கொரோனா பரவலால் தமிழகத்தில் 15 நாட்களுக்கு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளதால், தளபதி 65 படப்பிடிப்பும் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே பல முன்னணி ஹீரோக்களின் பட சூட்டிங், படங்களின் ரிலீஸ் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X