அட.. இப்படிக்கூட பண்ணலாமா.. யாருப்பா அந்தப்பக்கம்.. தீயாய் பரவும் பிரபல நடிகர் மகளின் ஜிம் வீடியோ!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகரின் மகள் ஜிம்மில் வித்தியாசமாக வொர்க்கவுட் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பிரபல பாலிவுட் நடிகரான அமீர்கானின் மகள் ஐரா கான். இவர் இதுவரை சினிமாவில் அறிமுகமாகவில்லை.
ஆனால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளார். ஐரா கான் அண்மையில் நடத்திய போட்டோ ஷுட் சமூக வலைதளங்களில் வைரலானது.

ஹாட் போட்டோ
காட்டுக்குள் செம ஹாட்டான போட்டோ ஷுட் நடத்தினார் ஐரா கான். அதில் முழுதொடையும் தெரியும்படி மல்லாக்கப்படுத்தப்படி முழு தொடையும் தெரியும் படி போஸ் கொடுத்திருந்தார்.

போட்டோ ஷுட்
இந்த போட்டோக்கள் இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டது. பல மீடியாக்களும் ஐரா கானின் ஹாட் போட்டோ ஷுட் தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அந்தரத்தில் தொங்கியப்படி
இந்நிலையில் ஐரா கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் ஜிம்மில் வொர்க்கவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், அந்தரத்தில் தொங்கும் ஐரா கானின் வயிற்றுக்கு இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் யாரோ ஒருவர் நீண்ட கம்பை வைத்து தொட வருவது போல் உள்ளது.

நெளியும் ஐரா கான்
அந்த கம்பு தனது உடல் மேல் படாதபடி ஐரா கான், அப்படியும் இப்படியும் தொங்கியப்படியே நெளிகிறார். ஒரு கட்டத்தில் காப்பாற்றிக்கொள்ள முடியாத ஐரா, கைகளை விட்டு கீழே இறங்குகிறார்.

பார்த்து ரசிப்பு
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஐராவின் இந்த வீடியோவை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர்.

ரசிகர்கள் சந்தேகம்
மேலும் ஹாட் போட்டோ ஷுட், கவர்ச்சி வீடியோ என வெளியிட்டு சினிமாவுக்குள் நுழைய அடித்தளம் போடுகிறாரா ஐரா என்றும் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











