பாலிவுட் நடிகர் ஆமிர்கானுக்கு கொரோனா.. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டார்.. ரசிகர்கள் ஷாக்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டை புரட்டி போட்ட கொரோனா வைரஸ் தற்போது மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.

இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா வைரஸின் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள் மீண்டும் முழு ஊரடங்கை அறிவித்துள்ளன.

பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட் பிரபலங்கள்

பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ரன்பீர் கபூர், சஞ்சய் லீலா பன்சாலி, மனோஜ் பாஜ்பாயி, சிதந்த் சதூர்வேதி, தாரா சுதாரியா, சதீஷ் கவுஷிக், அஜய் தேவவ்கன் உள்ளிட்ட பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ஆமிர் கானுக்கு கொரோனா

ஆமிர் கானுக்கு கொரோனா

இதோபோல் பிக்பாஸ் பிரபலமும் நடிகையுமான நிக்கி தம்போலி மற்றும் இயக்குநர் வினய் சப்ரு உள்ளிட்டோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் நடிகர் ஆமிர் கானும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ஊழியர்களுக்கு ஓய்வு

ஊழியர்களுக்கு ஓய்வு

தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தனது ஊழியர்களை ஓய்வெடுக்க கூறியுள்ள ஆமிர்கான், அனைவரும் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

வீட்டில் தனிமை

வீட்டில் தனிமை

தற்போது வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் ஆமிர் கான். கொரோனாவில் இருந்து முழுமையாக குணம் பெற்ற பிறகே லால் சிங் சத்தா படத்தை தொடங்குவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. லால் சிங் சத்தா படம் அமெரிக்க படமான ஃபாரஸ்ட் கம்ப் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X