பாலியல் வன்முறைகளுக்குதான் வழி வகுக்கும்.. தனுஷின் படத்தை கிழித்து தொங்கவிட்ட பிரபல நடிகர்!

சென்னை: நடிகர் தனுஷின் ராஞ்சனா திரைப்படம் பிற்போக்குதனமானது என்றும் பாலியல் வன்முறைகளுக்கு வழிவகுக்கும் படம் என்றும் அப்படத்தில் நடித்த நடிகர் அபய் தியோல் விமர்சித்துள்ளார்.

Recommended Video

Pudhupettai movie review | Pudhupettai movie explained

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ், ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் வெளியான ராஞ்சனா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.

இந்தப் படத்தில் நடிகை சோனம் கபூர் லீடிங் ரோலில் நடித்தார். மேலும் அபய் தியோல், ஸ்வரா பாஸ்கர், முகமது ஸீஷான் ஆயுப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ராஞ்சனா படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. இந்நிலையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் குறித்து நடிகர் அபய் தியோல் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதாவது இந்தப் படம் ஒரு பிற்போக்குத்தனமான படம் என கூறியுள்ளார் அபய் தியோல்.

வரலாறு ஏற்காது

வரலாறு ஏற்காது

மேலும் இப்படம் பாலியல் வன்முறைகளுக்கும் வழி வகுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். படம் குறித்து நெட்டிசன் ஒருவர் பகிர்ந்த விமர்சனத்தை தெளிவான மற்றும் சரியான விமர்சனம் என்று கூறிப்பிட்ட நடிகர் அபய் தியோல் வரலாறு இந்த படத்தை அதன் பிற்போக்குத்தனமான செய்திக்காக நிச்சயம் ஏற்காது என கூறியுள்ளார்.

அதை கதைதான்

அதை கதைதான்

மேலும் இது பல தசாப்தங்களாக பாலிவுட்டில் இருக்கும் கதையை தான் இந்தப் படம் காட்டியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார் அபய் தியோல். ஒரு பெண் ஒப்புக்கொள்ளும் வரை அவரை ஆண் துரத்தலாம். துரத்திக் கொண்டே இருக்க வேண்டும். சினிமாவில் மட்டும்தான் அவள் அதனை விருப்பப்பட்டு செய்வாள்.

விமர்சனத்தால் சலசலப்பு

விமர்சனத்தால் சலசலப்பு

இதனை திரையில் கொண்டாடுவது என்பது பாதிக்கப்பட்டவர்களைக் குற்றம்சாட்டுவதில்தான் சென்று முடியும் என்றும் தாறுமாறாய் விளாசியுள்ளார். மேலும் அந்த விமர்சகரையும் புகழ்ந்துள்ளார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு அபய் தியோல் ராஞ்சனா படம் குறித்து விமர்சித்திருப்பது பாலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Read more about: dhanush movie தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X