Akshay kumar : அக்ஷய் குமாரின் க்யூட் பேக்பேக்.. என்ன சிறப்பு தெரியுமா?
மும்பை : நடிகர் அக்ஷய் குமார், பாலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதிகமாக தென்னிந்திய மொழிப் படங்களின் ரீமேக்கிலும் இவரை காண முடிகிறது.
கடந்த 2021ம் ஆண்டில் அக்ஷய் நடிப்பில் வெளியான சூரியவன்ஷி படத்திற்கு பிறகு அக்ஷய்க்கு அடுத்தடுத்த தோல்ப் படங்களே அமைந்தன.
இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு பேசிய அக்ஷய் குமார், தன்னுடைய தோல்விகளுக்கு தானே பொறுப்பு என்றும் தெரிவித்தருந்தார்.

அக்ஷய் குமாரின் க்யூட் பேக்பேக் : நடிகர் அக்ஷய் குமார், பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராகவும் இருக்கிறார். கடந்த 2021ம் ஆண்டில் இவரது நடிப்பில் சூரியவன்சி படம் வெளியாகி சிறப்பாக கைக்கொடுத்தது. இந்தப் படத்தில் அக்ஷயுடன் கத்ரினா கையிப், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் ஆகியோரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். ஆனால் இந்தப் படத்தை தொடர்ந்து அக்ஷய் குமாருக்கு அடுத்தடுத்தப் படங்கள் தோல்விப் படங்களாகவே அமைந்தன.
கடந்த ஆண்டில் வெளியான ரக்ஷா பந்தர், சாம்ராட் பிரித்விராஜ் ஆகிய படங்கள் சொதப்பிய நிலையில், ராம்சேது படமும் கலவையான விமர்சனங்களையும் குறைவான வசூலையும் பெற்றது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான செல்பி படமும் முதல் நாளில் 2.50 கோடி ரூபாய்களை மட்டுமே வசூலித்தது. இதனிடையே தன்னுடைய திரைப்பயணத்தில் தொடர்ந்து 16 தோல்விப் படங்களை கொடுத்துள்ளதாக அக்ஷய் தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய படங்கள் வெற்றி பெறாததற்கு தான் மட்டும்தான் காரணம் என்றும் அவர் கூறியுள்ளார். மக்களின் ரசனை மாறியுள்ள நிலையில், நாமும் மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். வழக்கமான நடைமுறையி இருந்து மாறுபட்ட ஸ்கிரிப்டை ரசிகர்களை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய படங்களில் ரசிகர்கள் விரும்பும் விஷயங்கள் இல்லாததுதான் தோல்விகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிகமான படங்களில் மட்டுமில்லாமல் அதிகமான விளம்பரங்களிலும் அக்ஷய் குமார் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனிடையே தற்போது அவர் ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் உள்ளார். அவருடைய பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், அவரது பிறந்தநாளை கொண்டாட தற்போதே ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். கவுண்ட்டவுன் துவங்கியுள்ளதாகவும் ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கங்களில் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதனிடையே அவர் தன்னுடைய முதுகில் சுமந்து சென்ற பேக் பேக் தான் தற்போது மேலும் ட்ரெண்டாகியுள்ளது. லண்டன் பயணதிற்காக மும்பை விமானநிலையத்திற்கு வந்த அக்ஷய் குமார், தன்னுடைய பேக்பேகில் டெவில்ஸ் ஐ வைத்திருந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்ட அக்ஷய் குமார், கேமிராக்களுக்கும் போஸ் கொடுத்தார். இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்ரிநாத் மற்றும் ஜெகதீஸ்வர் கோயில்களில் அவர் தனது சாமி தரிசனத்தை மேற்கொண்டார்.



Click it and Unblock the Notifications











