சரியான கில்லாடி அக்ஷய் குமார்.. எழுந்து போய் கட்டியணைத்த முகேஷ் அம்பானி.. களைகட்டும் கல்யாணம்
ஜாம் நகர் : ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் பாடிய பாடலுக்கு முகேஷ் அம்பானி வைப் செய்த சம்பவம் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் அக்ஷய் குமார். கில்லாடி படத்தின் வெற்றியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அக்ஷய் குமார், 24 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். காமெடி, ஃபைட், டான்ஸ் என்று அத்தனையிலும் புகுந்து விளையாடும் அக்ஷய் குமார், ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாகவும் மிரட்டி இருப்பார்.

இந்த நிலையில் நடிகர் அக்ஷய் குமாரின் இன்னொரு முகத்தை ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமண கொண்டாட்டத்தில் வெளிப்படுத்தியுள்ளார். முகேஷ் அம்பானி இல்ல விழாவில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் நிச்சயம் அழைக்கப்படுவார்கள். அந்த வகையில் ஜாம் நகரில் நடைபெற்ற திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தில் பாலிவுட்டின் அத்தனை உச்ச நடிகர்களும் வந்தனர்.
3 நாட்கள் நடைபெற்ற கொண்டாட்டத்தில், 2வது நாளில் சங்கீத் கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் பாலிவுட் கலைஞர்கள் பலரும் டான்ஸ் ஆடி விருந்தினர்களை வாழ்த்தினர். அதேபோல் நடிகர் அக்ஷய் குமார் பாடகராக மாறி அசத்தினார். பிரபல பஞ்சாப் பாடலான Gur Nalo Ishq Mitha பாடலை பாடியது பலருக்கும் ஆச்சரியம் அளித்தது.
அக்ஷய் குமார் உற்சாகமாக டான்ஸ் ஆடி கொண்டே பாட, அதனை பார்த்த விருந்தினர்கள் பலரும் வைப் செய்ய தொடங்கினார். இறுதியாக நடன கலைஞர்களுடன் டான்ஸ் ஆடி தனது ஃபெர்பாமன்ஸை அக்ஷய் குமார் முடிக்க, முகேஷ் அம்பானி எழுந்து சென்று கட்டியணைத்து பாராட்டினார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
அக்ஷய் குமார் மட்டுமல்லாமல் சங்கீத் கொண்டாட்டத்தில் ஷாரூக் கான், சல்மான் கான் மற்றும் ஆமீர் கான் ஆகியோரும் நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதேபோல் பாலிவுட் நடிகைகள் ஜான்வி கபூர், அனன்யா பாண்டே உள்ளிட்டோர் அரங்கேறி ஆட்டத்தில் அசத்த, ஒட்டுமொத்த கூட்டமும் கொண்டாட்டத்தில் உச்சம் பெற்றது.


Click it and Unblock the Notifications











