கனடா பாஸ்போர்ட் சர்ச்சையால் கதறிய அக்‌ஷய் குமார்... எனக்கு இந்தியா தான் எல்லாமே...

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகரான அக்‌ஷய் குமார் தற்போது செல்ஃபி என்ற படத்தில் நடித்துள்ளார்.

ராஜ் மேத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.

அக்‌ஷய் குமாருடன் மிருணாள் தாகூர், நுஷ்ரத் பருச்சா, இம்ரான் ஹாஷ்மி ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், செஃல்பி படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அக்‌ஷய்குமார், கனடா நாட்டு பாஸ்போர்ட் சர்ச்சை குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

 அக்‌ஷய் குமார் நடிப்பில் செல்ஃபி

அக்‌ஷய் குமார் நடிப்பில் செல்ஃபி

பாலிவுட் டாப் ஹீரோக்களில் ஒருவரான அக்‌ஷய் குமார், கடந்தாண்டு 5 படங்களில் நடித்திருந்தார். அக்‌ஷய் நடிப்பில் பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், ரக்‌ஷாபந்தன், கட்புட்லி, ராம் சேது, ரக்‌ஷா பந்தன் ஆகிய படங்கள் வெளியான போதும், எதுவுமே அவருக்கு ஹிட் கொடுக்கவில்லை. இந்நிலையில், 2023ம் ஆண்டு அக்‌ஷல் குமார் நடிப்பில் முதல் படமாக செஃபி இன்று வெளியானது. இது மலையாளத்தில் ஹிட் அடித்த டிரைவிங் லைசென்ஸ் படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

 எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

ராஜ் மேத்தா இயக்கியுள்ள இந்தப் படத்தை கரன் ஜோஹர் உள்ளிட்ட மேலும் சிலர் தயாரித்துள்ளனர். அக்‌ஷய் குமாருடன் மிருணாள் தாகூர், நுஷ்ரத் பருச்சா, இம்ரான் ஹாஷ்மி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். தன்னுடன் செல்ஃபி எடுக்க ஆசைப்படும் ஆர்டிஓ அதிகாரியை, நடிகரான அக்‌ஷய் குமார் அவமதிக்கிறார். இதனால் இருவருக்கும் ஏற்படும் ஈகோ பிரச்சினை தான் இந்தப் படத்தின் மலையாள வெர்ஷன் கதை. அதையே அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள செல்ஃபி திரைப்படம். மலையாளத்தில் டிரைவிங் லைசென்ஸ் என்ற தலைப்பில் வெளியான இந்தப் படம், இந்தியில் செல்ஃபியாக ரிலீசாகியுள்ளது.

 கனடா பாஸ்போர்ட் சர்ச்சை

கனடா பாஸ்போர்ட் சர்ச்சை

மலையாளத்தில் டிரைவிங் லைசென்ஸ் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அக்‌ஷய்குமாரின் செல்ஃபி படம் மீதும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக இந்தப் படத்தை ப்ரோமோஷன் செய்யும்விதமாக ரசிகர்களுடன் மூன்றே நிமிடங்களில் 184 செல்ஃபிகளை எடுத்து மாஸ் காட்டினார். இதனிடையே கனடா நாட்டு பாஸ்போர்ட் சர்ச்சை தொடர்பாகவும் அவர் விளக்கம் கூறியுள்ளார்.

 இந்தியா தான் எனக்கு எல்லாமே

இந்தியா தான் எனக்கு எல்லாமே

கனடா நாட்டு குடியுரிமை பெற்றதற்காக அக்‌ஷய் குமாரை நெட்டிசன்கள் பலரும் ட்ரோல் செய்திருந்தனர். சாம்ராட் பிருத்விராஜ், ராம் சேது என வராலாற்றை திரித்துக் கூறும் படங்களில் நடித்துவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட முயற்சிக்கிறார் என வறுத்தெடுத்தனர். இதனால் அப்செட்டான அக்‌ஷய், தனது கனடா நாட்டு பாஸ்போர்ட்டை கைவிட முடிவு செய்ததாக தெரிவித்தார். மேலும், இந்தியாதான் எனக்கு எல்லாமே! நான் சம்பாதித்ததெல்லாம் இங்கிருந்துதான். மேலும் நான் திரும்பக் கொடுக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததில் அதிர்ஷ்டசாலி எனக் கூறியிருந்தார்.

மக்களுக்கு உண்மை தெரியவில்லை

மக்களுக்கு உண்மை தெரியவில்லை

அதேபோல், இந்த விவகாரத்தில் உண்மை தெரியாமல் மக்கள் தன்னை வசைபாடுகின்றனர். கனடாவில் இருந்த எனது நண்பன் தன்னை அங்கே வரும்படி அழைத்தார். அப்போது தான் கனேடிய பஸ்போர்ட் விண்ணப்பித்து அங்கே சென்றேன். அந்நேரம் எனது நடிப்பில் வெளியான இரண்டு படங்களும் சூப்பர் ஹிட்டானது அப்போது நான் கனேடிய பாஸ்போர்ட் தன்னிடம் இருப்பதை மறந்துவிட்டேன். இந்த பாஸ்போர்ட்டை மாற்றவேண்டும் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. தற்போது அதை மாற்ற விண்ணப்பித்து இருக்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் மக்கள் என்னை புரிந்துகொள்ளாமல் பேசுவது எனக்கு வேதனையளிக்கிறது என்றும் அவர் கூறினார். கடந்த சில மாதங்களாகவே அரசியல் ரீதியான சர்ச்சைகளை பேசிவரும் ஆக்‌ஷய் குமார், கனடா பாஸ்போர்ட் விவகாரத்தில் வசமாக சிக்கியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X