சூட்டிங் ஸ்பாட்டில் தரையில்தான் ரஜினி படுத்து தூங்குவார்.. அமிதாப்பச்சன் சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிதான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் படத்தின் அனைத்து நடிகர்கள், நடிகைகளும் மிகவும் உற்சாகமாக கலந்துக் கொண்டனர். மிகச்சிறப்பாக நடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்துக் கொள்ளவில்லை.
வேட்டையன் படத்தில் அமிதாப்பிற்கு மிகவும் முக்கியமான கேரக்டர் என்று கூறப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாகவும் அதற்கு எதிரான கருத்துக்களை கொண்ட மேலதிகாரியாக அமிதாப்பும் நடித்துள்ளனர். இதனிடையே வேட்டையன் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் அமிதாப் கண்டிப்பாக கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரால் பங்கேற்க முடியவில்லை.

வேட்டையன் படம்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் மிகவும் ஜரூராக பங்கேற்று வருகின்றனர். மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்களும் படம் குறித்த பல விஷயங்களை முன்னதாக பகிர்ந்த நிலையில், படத்தின் நடிகர்கள், நடிகைகளின் கேரக்டர் குறித்த வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் லைகா நிறுவனம் அடுத்தடுத்து வெளியிட்டு மாஸ் காட்டியது. இந்நிலையில் நேற்றைய தினம் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் -அமிதாப்பச்சன் கூட்டணி: வேட்டையன் படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து அமிதாப் பச்சன் 30 ஆண்டுகளுக்கு பிறகு நடித்துள்ளார். இவர்களது கூட்டணி மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போலி என்கவுண்டருக்கு எதிரான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். அவருடைய இந்த விஷயத்தை எதிர்க்கும் மேலதிகாரியாக நடிகர் அமிதாப் நடித்துள்ள நிலையில், இந்தக் கூட்டணி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்துக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
வேட்டையன் இசை வெளியீடு: ஆனால் நேற்றைய தினம் நடைபெற்ற இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் அமிதாப்பச்சன் கலந்துக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர் மும்பையிலிருந்து ரஜினிகாந்தை பாராட்டி வீடியோ ஒன்றை அனுப்பியிருந்தார். அதில் கடந்த 1991ம் ஆண்டில் முகுல் எஸ் ஆனந்த் இயக்கத்தில் உருவான ஹம் படத்தில் ரஜினியுடன் நடித்திருந்தது குறித்து பேசியுள்ளார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனின் தம்பியாக நடிகர் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்நிலையில், ஹம் படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ரஜினிகாந்த், செட்டின் தரையில் மட்டுமே படுத்துத் தூங்குவார் என்று பகிர்ந்துக்கொண்டார்.
ரஜினி குறித்து அமிதாப்பச்சன் பாராட்டு: அந்த அளவிற்கு நடிகர் ரஜினிகாந்த் எளிமையானவர் என்று அமிதாப் பச்சன் கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த் அனைத்து நட்சத்திரங்களுக்கும் மேலானவர் என்றும் தனது வீடியோவில் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். ஹம் படத்திற்கு முன்னதாக ரஜினிகாந்த் மற்றும் அமிதாப்பச்சன் இணைந்து அந்தா கானூன் மற்றும் ஜெராப்தார் போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில், வேட்டையன் இவர்கள் கூட்டணியில் உருவாகியுள்ள 4வது படம் மற்றும் அமிதாப்பச்சனின் நேரடி தமிழ் படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தில் அமிதாப் கேரக்டருக்கு பிரகாஷ் ராஜை டப்பிங் பேச வைத்து அதை ஏஐ மூலம் அமிதாப் வாய்சாக படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











