லேசான அறிகுறிகள்தான்.. அமிதாப் நலமாக இருக்கிறார்.. மருத்துவமனை சொன்ன நல்ல சேதி!

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமிதாப் பச்சன் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

Aishwarya Rai Bachchan &Daughter Aradhya Tested Positive

பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Bollywood actor Amitabh Bachchan is stable with mild symptoms: Nanavati hospital

அதனை தொடர்ந்து அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவர்கள் இருவரும் ஹோம் குவாரண்டைனில் உள்ளனர்.

அமிதாப் பச்சன் குடும்பத்தினர் விரைவில் குணமடைய வேண்டும் என நாடு முழுவதும் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அமிதாப் பச்சனின் உடல்நிலை குறித்து நானவதி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் அமிதாப் பச்சனுக்கு லேசான அறிகுறிகள்தான் இருப்பதாகவும் அவர் ஸ்டேபிளாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பிரபலங்கள் பலரும் அமிதாப் மற்றும் அவரது குடும்பத்தினர் விரைவில் கொரோனாவில் இருந்து நலம் பெற வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X