வீடு திரும்பினார் அமிதாப் பச்சன்.. திடீர் அறுவை சிகிச்சை செய்ய காரணம் என்ன?
மும்பை: பாலிவுட் ஜாம்பவான் அமிதாப் பச்சனுக்கு நேற்று உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், அவர் தற்போது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உடல் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் பிக் பீ, ஷாஹேன்ஷா,சாதி கே என பாலிவுட் ரசிகர்களால் அழைக்கப்படும் அமிதாப் பச்சன், 1942ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். 81வயதாகும் அமிதாப் பச்சன், சினிமாவில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக பயணித்து வரும் இவர், 200க்கும் மேற்பட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரான அமிதாப் பச்சன், சிறந்த நடிகர் பிரிவில் நான்கு தேசிய திரைப்பட விருதுகள், சர்வதேச திரைப்பட விழாக்கள், பதினாறு ஃபிலிம்பேர் விருதுகள் என பல விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குபவர் என பன்முகங்களை கொண்டு வருகிறார்.
ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை: இந்நிலையில்,அமிதாப் பச்சனுக்கு நேற்று உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது காலில் இருந்த ரத்தக் கட்டியை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. காலில் இருந்த ரத்தக் கட்டியை அகற்றாவிட்டால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறியதை அடுத்து நேற்று இந்த அறுவை சிகிச்சை அவசரமாக செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனைவருக்கும் நன்றி: இதையடுத்து அறுவை சிகிச்சை முடித்து அபிதாப், பிற்பகலுக்கு மேல் வீட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக அமிதான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமிதாப் மருத்துவமனையில் இருந்ததால் கவலையில் இருந்த ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்தனர்.
கைவசம் உள்ள படம்: நடிகர் அமிதாப் பச்சன். கமல்ஹாசன் மற்றும் தீபிகா படுகோனே, பிரபாஸ், திஷா பதானி நடிக்கும் கல்கி 2898 AD படத்திலும், நாக் அஸ்வின் இயக்கிய ஏவடே சுப்ரமண்யம் படத்திலும், டி.ஜே.ஞானவேல் எழுதி இயக்கிய வேட்டையன் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். 33 ஆண்டுகளுக்கு பிறகு வேட்டையன் படத்தின் மூலம் ரஜியுடன் அபிதாப் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தில் ரஜினிகாந்த், ஃபஹத் பாசில், ராணா டக்குபதி ஆகியோரும் நடித்து வருகிறார். தற்போது மேற்கொண்டுள்ள அறுவை சிகிச்சைக்கு பின் சில நாட்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











