இதுதான் என்னை இளமையாக உணர வைக்குது.. அனில் கபூர் கருத்தால் ஷாக்கான கரண் ஜோஹர்!

மும்பை : பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக இருக்கிறார் கரண் ஜோஹர்.

இவரது காபி வித் கரண் ஷோ 7வது சீசனை தற்போது ஒளிபரப்பி வருகிறது. இதில் பிரபல பாலிவுட் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இவரது தற்போதைய எபிசோடில் பிரபல பாலிவுட் நடிகர் அனில் கபூர் மற்றும் வருண் தவான் பங்கேற்று பல விஷயங்களை பேசினர்.

காபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சி

காபி வித் கரண் சீசன் 7 நிகழ்ச்சி

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், டிவி ஆங்கர் என பன்முகத் திறமையுடன் வலம் வந்துக் கொண்டிருப்பவர் கரண் ஜோகர். இவர் பாலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிகளிலும் படங்களை தயாரித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சியின் 7வது சீசனை தற்போது இவர் ஆங்கரிங் செய்து வருகிறார்.

பிரபல நிகழ்ச்சி

பிரபல நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சி பாலிவுட்டில் மிகவும் பிரபலம். இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த நிலையில் தற்போது இந்த ஷோ துவங்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த ஷோவில் முன்னதாக பிரபல நடிகை சமந்தா மற்றும் அக்ஷய் குமார் கலந்துக் கொண்டனர்.

அக்ஷய் -சமந்தா நிகழ்ச்சி

அக்ஷய் -சமந்தா நிகழ்ச்சி

இந்த எபிசோட் மிகவும் அதிகமான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தது. இருவரும் இணைந்து புஷ்பா படத்தின் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடிய நடனமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த அக்ஷய், சமந்தாவை கைகளில் தூக்கிக் கொண்டு வந்ததும் ரசிக்களை கவர்ந்தது.

அனில்கபூர் -வருண் தவான் பங்கேற்பு

அனில்கபூர் -வருண் தவான் பங்கேற்பு

இதனிடையே இந்த வார எபிசோடில் பிரபல ஜக்ஜக் ஜியோ படத்தின் நடிகர்கள் அனில் கபூர் மற்றும் வருண் தவான் இணைந்துள்ளனர். இந்தப் பிரமோவில் அனில் கபூரிடம் கரண் ஜோஹர் ஒரு கேள்வியை கேட்கிறார். அவரை இளமையாக உணர வைக்கும் மூன்று விஷயங்களை சொல்லுமாறு அவர் தன்னுடைய கேள்வியை கேட்கிறார்.

எடக்கு மடக்காக பதில் சொன்ன அனில் கபூர்

எடக்கு மடக்காக பதில் சொன்ன அனில் கபூர்

கரண் ஜோஹரின் கேள்விக்கு உடனடியாக பதிலளித்த அனில் கபூர், செக்ஸ், செக்ஸ், செக்ஸ் என்று சொல்கிறார். இதனால் கரண் ஜோஹர் மட்டுமின்றி, உடன் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட வருண் தவானும் அதிர்ச்சியடைகின்றனர். தொடர்ந்து இருவரும் பல கேள்விகளுக்கு தங்களுடைய சுவாரஸ்யங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர உள்ளதாக ப்ரமோவில் காணப்படுகிறது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பு

பாலிவுட்டின் மிகவும் பிரபலமான காபி வித் கரண் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில் கடந்த 6 சீசன்களும் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இந்நிலையில் தற்போது சீசன் 7 நிகழ்ச்சி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதுவரை 10 எபிசோட்களை இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X