இந்தியன் 2 அப்டேட்: கமலுடன் கைகோர்க்கும் பாலிவுட் ஸ்டார் அனில் கபூர்

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் பாலிவுட்டின் மிகபெரிய நடிகரான அனில் கபூர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பிறகு அனில் கபூர் இயக்குநர் ஷங்கரை நேரில் சென்று சந்தித்து படவேலைகளைப் பற்றி தெரிந்து கொண்டார். இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து 1999ஆம் ஆண்டு வெளியான முதல்வன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் அனில்கபூர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய பிறகு இருந்த பரபரப்பான அரசியல் சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் நடத்துவாரா இல்லையா, என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Bollywood Actor Anil Kapoor going to acts in Indian 2

ஆனால், கமல்ஹாசன் எதைப்பற்றியும் கவலைப்படாமல், கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 2வை தொகுத்து வழங்கியதோடு, அந்த நிகழ்ச்சியிலேயே இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாகவும் அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டார். அப்போதே ரசிகர்களின் மத்தியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

தற்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3ஐயும் அவரே தொகுத்து வழங்கி வருவதோடு மட்டுமல்லாமல் பல நேரங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இடையிடையே கமல்ஹாசனும் இந்தியன் 2 பற்றி அடிக்கடி பேசி வந்தார். இன்னும் சில நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிய உள்ள நிலையில் இதற்கு பின் கமல்ஹாசன் முழுவதுமாக இந்தியன் 2 படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே சமயத்தில் மறைமுகமாக படத்தின் விளம்பர வேலைகளும் துவங்கியுள்ளன. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது காலைப் பொழுதின் உற்சாக பாடலில் ,இந்தியன் 2 என்று உடை அணிந்து வீட்டின் உள்ளே வந்த இளைஞர்கள் சிலர் ஹவுஸ்மேட்களை உற்சாக படுத்தி நடனம் ஆடினார்கள்.

இதற்கிடையில் இப்படத்தில் பாலிவுட்டின் மிகபெரிய நடிகரான அனில் கபூர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று சென்னையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பிறகு அனில் கபூர் இயக்குநர் ஷங்கரை நேரில் சென்று சந்தித்து படவேலைகளைப் பற்றி தெரிந்து கொண்டார். இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து 1999ஆம் ஆண்டு வெளியான முதல்வன் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் அனில்கபூர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்தியான் 2 படத்தில் கமல்ஹாசனுடன் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், சமுத்திரகனி, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்க உள்ள நிலையில் அனில்கபூரும் இனைந்து உள்ள நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X