தமன்னா உடல் பற்றி ஆபாசமான கருத்து.. 69 வயது நடிகர் செய்யும் வேலையா இது? விளாசும் நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை தமன்னாவின் உடல் குறித்து மூத்த நடிகர் கூறிய கருத்து தற்போது இணையத்தில் பேசுபொருளாகி விவாதத்திற்குள்ளாகி உள்ளது. ஒரு மூத்த சக நடிகையை இப்படி பொது இடத்தில் அவமானப்படுத்தக்கூடாது என்று இணையவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சுபாங்கர் மிஸ்ராவின் யூடியூப் சேனலுக்கு அனு கபூர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அந்த பேட்டியில் தொகுப்பாளர், பாலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகை தமன்னாவை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கு அனு கபூர், தமன்னாவா... அது யார்? அவரைப் பற்றி தனக்குத் தெரியாது என்று கூறினார். உடனே தொகுப்பாளர், என்ன இப்படி சொல்லீட்டிங்க தமன்னா ஒரு திரைப்பட நடிகை, தற்போது பாலிவுட்டில் அதிகம் பேசப்படும் நடிகையாக அவர் இருக்கிறார் என்றார். அதற்கு பதில் அளித்த அனு கபூர், நீங்கள் அவளுடன் போட்டோ எடுத்து இருக்கீங்களா? இல்லை, நீங்கள் அனைவரும் அவளை சந்தித்திருக்கிறீர்களா? "அவள் ஒரு பெரிய நடிகையாக இருந்தால், அது அவளுக்கு நல்லது. நீங்கள் அவளை பற்றி பேசினால், தெரிந்து வைத்திருந்தால் அதற்காக, எனக்கும் அவளைப்பற்றி தெரிய வேண்டும் என நினைக்கிறீர்களா? என்று அனு கபூர் பேசினார்.

தமன்னா பாட்டியா: அதைத்தொடர்ந்து தொகுப்பாளர் தமன்னா நடித்த ' ஆஜ் கி ராத்' பாடலின் ஒரு கிளிப்பை காட்டி இவர் தான் தமன்னா என்றார். அந்த கவர்ச்சியான பாடலைப்பாத்த அனு கபூர், "அய்யோ.. அவளுக்கு என்ன பால் போல வெண்மை உடம்பு" என தமன்னாவின் உடம்பைப் பற்றி வெளிப்படையாக பலர் முகம் சுளிக்கும் வகையில் வர்ணித்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி உள்ளது. இணையவாசி ஒருவர், தமன்னா பாட்டியா ஒரு திறமையான நடிகை, அவரை அனு கபூர் இழிவுபடுத்தப்படக்கூடாது, ஒரு மூத்த நடிகர் செய்யும் வேலையா இது என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு இணையவாசி, அனு கபூர் தனது வார்த்தைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
வார்த்தையில் கவனம் தேவை: பொது நிகழ்ச்சிகளில் நடிகைகளின் உடல் குறித்து விமர்சிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் இணையத்தில் தங்களது கண்டனத்தை பகிர்ந்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தமன்னா பாட்டியா இதுவரை எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. தமன்னா அண்மையில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் விஜய் வர்மாவுடன் இணைந்து இவர் அளித்த நெருக்கமான காட்சிகள் பெரும் வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











