படுக்கை அறை காட்சியில் ஆத்துமீறிய ஹீரோ.. பயந்து ஓடிய நடிகை.. மூத்த நடிகர் சொன்ன அதிர்ச்சி தகவல்!
மும்பை: சினிமாவில் படுக்கை அறை காட்சி, முத்தக்காட்சி இன்னும் பல நெருக்கமான காட்சிகளை நாம் பார்த்து இருப்போம். அந்த காட்சியை பார்க்கும் நமக்கு அது ஒரு காதல் நிறைந்த காட்சியாக தோன்றியாலும். அந்த காட்சிகளில் நடிக்கும் நடிகைகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் ரசிகர்களுக்கு தெரியாது. ஆனால், இதுபோன்ற படுக்கை அறை காட்சியில் நடிக்கும் போது சில நடிகர்கள் கட்டுப்பாட்டை இழந்து நடிகையிடம் அத்துமீறி நடந்து கொள்வதாக பாலிவும் மூத்த நடிகர் அனு கபூர் அதிர்ச்சியான தகவலை கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகரான அன்னு கபூர், ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்து இருக்கும் பேட்டியில், சினிமாவில் படுக்கறை, முத்தக்காட்சி என நெருக்கமான காட்சிகளில் நடிக்கும்போது சில நடிகர்கள் வேண்டுமென்றே கட்டுப்பாட்டை இழந்து நடிகைகளிடம் அநாகரீகமாக நடந்துகொள்கிறார்கள். இயக்குநர் கட்' சொன்ன பிறகும் அத்துமீறலைத் நடிகர்கள் தொடர்கிறார்கள். எனக்குத் தெரிந்து ஒரு ஹீரோ அப்படி அத்துமீறியதால், நடிகை பயந்துபோய் அங்கிருந்து தப்பியோடி, ,இரண்டு நாட்கள் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. நடிகரின் இதுபோன்ற செயல் சினிமாவின் இருண்ட மறுபக்கத்தை காட்டுகிறது என்றார்.

அன்னு கபூர்: அதே போல, மற்றொரு அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட நடிகர் அனு கபூர், விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் வெளியான '7 Khoon Maaf' திரைப்படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் இணைந்து பணியாற்றினேன். அப்போது அந்த படத்தில் ஒரு முத்தக் காட்சி இருந்தது. ஆனால், பிரியங்கா அதில் நடிக்க மிகவும் தயங்கி இயக்குநரிடம் அந்த காட்சியை நீக்கும்படி கூறினார். ஆனால், இயக்குநர் "அந்தக் காட்சி ஒரு காரணத்திற்காக எழுதப்பட்டது என்றும் அதை நீக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இந்த செய்தி எனக்கு தெரியவந்ததும், நான் இதுபற்றி எதையும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. நான் எப்போதும் இதுபோன்ற காட்சிகளை நடிப்பதை வேலையாக பார்க்கிறேன். ஒரு நடிகை பதட்டமாக உணர்ந்தால், அவர் நலமாக இருக்கிறாரா என்று நான் கேட்பேன். அதற்கு மேல் நான் எதுவும் கேட்க மாட்டேன். ஏனெனில் அது அவரை மேலும் சங்கடப்படுத்தக்கூடும் என அனு கபூர் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications