Arjun kapoor: பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூருக்கு இப்படியொரு நோய் பாதிப்பா.. ரசிகர்கள் கவலை!

மும்பை: தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் அர்ஜுன் கபூர். இவர் தொடர்ந்து பல ஆண்டுகளாக இணை தயாரிப்பாளராகவும் துணை நடிகராகவும் சினிமாவில் நடித்துவந்த நிலையில் உதவி இயக்குநராக சலாம் இ இஷ்க் என்ற படத்தில் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான Ishaqzaade என்ற படம் மூலம் பாலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமானார்.

தொடர்ந்து Aurangzeb, Gunday, 2 States படங்களில் நடித்து கவனத்தை பெற்ற அர்ஜுன் கபூர், அடுத்தடுத்த சிறப்பான படங்களின் தேர்வை சிறப்பாக செய்து வந்தார். தற்போது இவர் வில்லனாக நடித்துள்ள சிங்கம் அகெய்ன் படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பையும் வசூலையும் குவித்துள்ளது.

arjun kapoor malaika arora

நடிகர் அர்ஜுன் கபூர்: நடிகர் அர்ஜுன் கபூர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன். இவர் தொடர்ந்து 20 ஆண்டுகளை தாண்டி பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆயினும் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான Ishaqzaade படம் மூலம்தான் இவர் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து Aurangzeb, Gunday, 2 States என இவரது படங்கள் மிகச்சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். முன்னதாக இணை தயாரிப்பாளர், உதவி இயக்குநராகவும் இவர் செயல்பட்டுள்ளார்.

சிங்கம் அகெய்ன் படம்: அர்ஜுன் கபூர் நடிப்பில் சமீபத்தில் சிங்கம் அகெய்ன் படம் வெளியாகி மிகச்சிறப்பான வரவேற்பு பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் படத்தில் அஜய் தேவ்கன், லீட் கேரக்டரில் நடித்துள்ள நிலையில் அவருக்கு வில்லனாகியுள்ளார் அர்ஜுன் கபூர். கடந்த 2011ம் ஆண்டில் வெளியான சிங்கம் படத்தின் யூனிவர்சில் அடுத்தடுத்து 2014 மற்றும் 2018ல் படங்கள் வெளியானது. இதில் 4 ஹீரோக்கள் இணைந்துள்ளனர். ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் தமிழில் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்தது.

நோய் பாதிப்பு குறித்து அர்ஜுன் கபூர்:இந்தப் படம் ஒரே வாரத்தில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் வில்லனாக அர்ஜுன் கபூர் நடித்துள்ள நிலையில், படத்தின் வெற்றி குறித்து அவர் உற்சாகம் தெரிவித்திருந்தார். இந்தப் படம் தனக்கு மறுபிறப்பு, புதிய தொடக்கம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தனக்கு ஹாஷிமோட்டோ என்ற நோய் பாதிப்பு இருப்பதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இது தைராய்டு தொடர்பான சிக்கல் என்றும் இந்த நோய் பாதிப்பு இருந்தால் ரிலாக்சாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ள அர்ஜுன் கபூர், ஆனால் தன்னுடைய துறையில் அது சாத்தியமில்லை என்றும் கூறியுள்ளார்.

மோசமான உடல்நிலை: சிங்கம் அகெய்ன் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டபோது மிகவும் மோசமான உடல்நிலையில் தான் இருந்ததாகவும் உடலளவில் மட்டுமில்லாமல் மனதளவிலும் மிகவும் மோசமாக இருந்ததாகவும் அர்ஜுன் கபூர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். தனக்கு ஏதோ சரியில்லை என்பதை தன்னால் உணர்ந்துக் கொள்ள முடிந்ததாகவும் அனைத்தையும் தள்ளிப் போட்டு வந்ததாகவும் அர்ஜுன் கபூர் தெரிவித்துள்ளார். தற்போது உடல்நிலை தேறியுள்ளதாகவும் கூறியுள்ளார். பாலிவுட் நடிகை மலாய்கா அரோராவுடன் கடந்த 2018ம் ஆண்டு முதல் இவர் காதலில் இருந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர். அதை தீபாவளி சமயத்தில் அர்ஜுன் கபூரும் உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X