Actor Bobby deol: அஜித்துடன் மோத தயாராகும் கங்குவா பட வில்லன்!

சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் சிவா இயக்கத்தில் சூட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அதற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்தப் படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி ஜோடியாகியுள்ள நிலையில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் பாபி தியோல் அதிரடி காட்டியுள்ளார்.

பாபி தியோலின் பிறந்தநாளையொட்டி படத்தில் அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. இந்தப்படம் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள நிலையில், பாலிவுட்டை சேர்ந்த திஷா பதானி மற்றும் பாபி தியோல் இந்தப் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடித்ததன்மூலம் தமிழ் படத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார் பாபி தியோல். இவர் பாலிவுட்டில் ஹீரோவாக நடித்தவர்.

BollyWood actor Bobby deol going to join as a villain in Ajith s Good Bad Ugly it seems

கங்குவா படம்: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படத்தை பிரபல இயக்குனர் சிவா இயக்கியுள்ள சூழலில் இந்தப் படம் தற்போது ஒட்டுமொத்த சூட்டிங்கை முடித்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ள சூழலில் வில்லனாக பாபி தியோல் மிரட்டியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கோவா, கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடிகர் சூர்யா நடித்துள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஓடிடியில் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சூர்யா வில்லன் பாபி தியோல்: இந்தப் படத்திற்காக சூர்யா அதிகமாக மெனக்கெட்டுள்ள நிலையில் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த படத்திற்காக தன்னுடைய பிட்னஸை அவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியான சூழலில் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்பதில் படக்குழுவினர் உறுதியாக உள்ளனர். படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் ஹீரோ பாபி தியோல் மிரட்டியுள்ளார். முன்னதாக இவரது பிறந்தநாளையொட்டி வெளியான போஸ்டர் அடுத்ததாக வெளியான டீசர் ஆகியவற்றில் இவரது மிரட்டலான லுக் வெளியானது.

அஜித் வில்லன்: சூர்யாவின் வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு பாபி தியோல் வில்லனாக சரியான தேர்வு என்று விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து பாபி தியோல் அடுத்ததாக குட் பேட் அக்லி படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தின் சூட்டிங் ஜூன் மாதத்தில் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ள சூழலில் அஜித்தின் டெஸ்ட் சூட்கள் முன்னதாக நடந்து முடிந்துள்ளன. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக 2 நாயகிகள் இணையுள்ளதாகவும் ஒருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் பாலிவுட்டை சேர்ந்தவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

அஜித் -ஆதிக் கூட்டணி: ஆக்சன் படமாக உருவாகவுள்ள இந்தப்படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக அஜித் ஏற்காத கேரக்டரில் இந்த படத்தில் அவரது கேரக்டர் அமைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் இணைந்து நடித்திருந்த ஆதிக் ரவிச்சந்திரன், இந்தப் படத்தில் அவரை இயக்கவுள்ளார். படத்தின் முதல் கட்ட சூட்டிங் ஐதராபாத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X