புட்ட பொம்மா பாடலுக்கு ஹிப் ஹாப் ஸ்டைலில் டான்ஸ் ஆடி அசத்திய பாலிவுட் நடிகர்!
மும்பை : அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான அல வைகுண்டபுரம்லோ திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் புட்ட பொம்மா.
க்யூட்டான நடனம் அசத்தலான கோரியோகிராஃபி என மிகவும் வித்தியாசமாக உருவாகியிருந்த இந்த பாடல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைத்திருந்தது.
ஏற்கனவே இந்த பாடலுக்கு பல திரைப்பிரபலங்கள் நடனமாடி அசத்தி இருந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யான் ஹிப்ஹாப் ஸ்டைலில் நடனம் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

ஹாட் டாப்பிக்காக
பாலிவுட்டில் இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் கார்த்திக் ஆர்யான் எக்கச்சக்கமான பெண் ரசிகர்களை கொண்டுள்ளவர். நடிகை ஜான்வி கபூரை காதலிப்பதாக சமீபகாலமாக ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது . இருவரும் இணைந்து தோஸ்தானா 2ல் நடித்தும் வருகின்றனர்.

அதிக வசூல்
லவ் ஆஜ் கல் 2 வெற்றியைத் தொடர்ந்து தமாகா, போல் புலையா 2 ஆகிய படங்களில் நடித்துவரும் இவர் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 2020 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் வெளியான அல வைகுண்டபுரம்லோ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு அந்த ஆண்டு தெலுங்கு சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படமாகவும் இருந்தது.

பல கோடி ரசிகர்கள்
அல வைகுண்டபுரம்லோ படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடல் மிகவும் வித்தியாசமான கோரியோகிராஃபி காஸ்ட்யூம்ஸ் மற்றும் இசை என அனைத்திலும் புதுமையாகவும் அதே சமயம் அனைவரும் ரசிக்கும் வகையிலும் இருக்க இன்றுவரை யூட்யூப் தளத்தில் அதிக பார்வையாளர்களை கொண்ட பாடலாக உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்தப் பாடலுக்கு பல கோடி ரசிகர்கள் உள்ளனர்.

ஹிப்ஹாப் ஸ்டைலில் டான்ஸ்
டிக் டாக் உள்ளிட்ட பல செயலிகளின் மூலம் பிரபலங்கள் பலரும் புட்ட பொம்மா பாடலுக்கு நடனமாடி இருந்தனர். இந்த வகையில் நடிகர் கார்த்திக் ஆர்யான் ஹிப்ஹாப் ஸ்டைலில் வேற லெவலில் டான்ஸ் ஆடி அசத்தியுள்ள வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பிரபலங்கள் பலரும் நடனத்தை பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











