Don't Miss!
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- News
50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு அருகே பச்சை வால் நட்சத்திரம்.. கற்காலத்திற்கு பிறகு முதல் முறை!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கமலுடன் இணையும் பாலிவுட் பிரபலம்… இந்தியன் 2 படத்தில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சென்னை: மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் கமல்ஹாசன், தற்போது இந்தியன் 2 படத்தில் பிசியாக இருக்கிறார்.
ஷங்கர் இயக்கும் இந்தப் படம் லைகா, ரெட் ஜெயன்ட் தயாரிப்பில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.
இந்தியன் 2 படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், பாலிவுட் பிரபலம் ஒருவரும் இந்தப் படத்தில் கமலுடன் கை கோர்த்துள்ளார்.
மருத்துவமனையில்
ஓரிரு
நாள்
தங்கியிருப்பார்..கமல்ஹாசன்
உடல்
நிலை
மருத்துவமனை
அறிக்கை..பிக்பாஸ்?

வேகமெடுக்கும் இந்தியன் 2
விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றி கமலின் மார்க்கெட்டை வேற லெவலில் கொண்டு போய்விட்டது. இதனால், கிடப்பில் கிடந்த இந்தியன் 2 படத்தை தூசு தட்டிய ஷங்கர் தற்போது முழுவீச்சில் இயக்கி வருகிறார். லைகா, ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கும் இந்தியன் 2 அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசன் - ஷங்கர் இருவரும் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.

இணைந்த பாலிவுட் பிரபலம்
இந்தியன் 2 படத்தில் கமலுடன் காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அதேபோல், பிரபல கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் அப்பாவான யோகராஜ் சிங்கும் கமிட் ஆகியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்கு மேக்கப் போடும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில், பாலிவுட் பிரபலம் ஒருவரும் இந்தியன் 2 படத்திற்காக கமலுடன் இணைந்திருப்பது உறுதியாகியுள்ளது.

கமலுடன் குல்ஷன் குரோவர்
பாலிவுட்டில் சுமார் 40 வருடங்களாக நடித்து வரும் குல்ஷன் குரோவர், இந்தியன் 2 படத்தில் இணைந்துள்ளாராம். இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமலுடன் அவர் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இதனை கன்ஃபார்ம் செய்துள்ளது. பாலிவுட்டின் சீனியர் ஆக்டரான குல்ஷன் குரோவர் இந்தியன் 2வில் இணைந்துள்ளது, ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமலின் ப்ளாஷ்பேக் காட்சிகளில் குல்ஷன் குரோவர் நடிக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

விரைவில் இந்தியன் 2 அப்டேட்
சமீபத்தில் திருப்பதியில் நடைபெற்ற இந்தியன் 2 ஷூட்டிங்கில் 1920ம் ஆண்டுகளில் இருப்பது போல் செட் அமைக்கப்பட்டு காட்சிகள் எடுக்கப்பட்டதாம். இதனையடுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட பின்னர் படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. அதனால், விரைவில் டைட்டில் டீசர், ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது தீம் மியூசிக் என ஏதாவது ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.