36 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் இணைந்த ஜாக்கி ஷெராஃப்..ஜெயிலர் மாஸ் அப்டேட்!
சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் இணைந்துள்ளார்.
ரஜினி தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீத முடித்துள்ள நிலையில், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொண்டுள்ளார்.

ஜெயிலர்
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படங்களைப் போல் இல்லாமல் ஜெயிலர் திரைப்படம் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி உள்ளது. இத்திரைப்படத்தில், மோகன்லால், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், புஷ்பா பட புகழ் சுனில், ரம்யா கிருஷ்ணன்,தமன்னா,யோகி பாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும் இப்படத்தை சன் பிக்ஸர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்
இந்நிலையில் ஜெயிலர் படத்தில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ஜாக்கி ஷெராப் வெறித்தனமாக லுக்கில் இருக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் ஜாக்கி ஷெராப் விஜய் நடித்த பிகில் படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

36 ஆண்டுகளுக்கு பிறகு
பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்பும் ரஜினிகாந்தும் 36 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயிலர் படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். 1987 ஆம் ஆண்டு பிரபாத் கண்ணா இயக்கத்தில் உருவான 'உத்தர் தக்ஷின்' என்ற இந்தி திரைப்படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தார்கள். இப்படம் தமிழில் 'செல்ல பிள்ளை' என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

பான் இந்திய திரைப்படம்
ஜெயிலர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக வெளியாக உள்ளதால், அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் வகையில் 4 மொழிகளில் உள்ள முக்கிய நட்சத்திரத்தில் இந்த படத்தில் இணைந்துள்ளனர். இப்படம், நெல்சன் திலீப்குமாரின் சரியான பான் இந்திய நாடகமாக இருக்கும் என்றும், இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











