அண்ணாத்த படத்தில் ரஜினியை மிரட்ட போகும் வில்லன் இவர்தானாமே.. கேட்கும் போதே பயந்து வருது!

சென்னை: அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்தப்படத்தில் முன்னணி நடிகர் நடிகைகள் பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் வில்லன்களாக பிரகாஷ் ராஜ் மற்றும் வேல ராமமூர்த்தி ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஜாக்கி ஷெராஃப்

ஜாக்கி ஷெராஃப்

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பாலிவுட் நடிகரான ஜாக்கி ஷெராஃப் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடைசியாக விஜயின் பிகில் படத்தில் நடித்தார்.

முக்கிய வில்லன்

முக்கிய வில்லன்

தற்போது அண்ணாத்த படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கிராமத்து கதையாக உருவாகும் அண்ணாத்த படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீஷ், சூரி, ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

விரைவில் படப்பிடிப்பு

விரைவில் படப்பிடிப்பு

இப்படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். ஈ.சி.ஆரில் விறுவிறுப்பான வேகத்தில் செட் பணிகள் நடைபெறுவதால் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் தொடங்கும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் நயன்தாரா சம்பந்தப்பட்ட காட்சிகள் முதலில் படமாக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ரஜினியுடன் ஜனவரியில்

ரஜினியுடன் ஜனவரியில்

மேலும் ஜாக்கி ஷெராஃப் விரைவில் ஷுட்டிங்கில் இணைந்து ரஜினிக்காந்த் இல்லாத தனது காட்சிகளை ஜனவரிக்குள் முடித்து விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினிக்காந்துடன் இணைந்து எடுக்கப்படவுள்ள காட்சிகள் ஜனவரியில் படமாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

50 சதவீத காட்சிகள்

50 சதவீத காட்சிகள்

ஜனவரியில்தான் ரஜினிக்காந்த் படப்பிடிப்பில் இணைவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனது 50 சதவீத காட்சிகளை முடித்து விட்டார் நடிகர் ரஜினிகாந்த் , எஞ்சியுள்ள காட்சிகள் மட்டுமே ஜனவரியில் படமாக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பத்தாண்டுகளுக்கு பிறகு

பத்தாண்டுகளுக்கு பிறகு

ஜாக்கி ஷெராஃப் தியாகராஜன் குமாரராஜாவின் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்ற ஆரண்ய காண்டம் படத்தில் மறக்கமுடியாத பாத்திரத்தில் நடித்து கோலிவுட்டில் ஒரு சாதனை படைத்தார். பின்னர் பத்தாண்டுகளுக்கு பிறகு, கடந்த ஆண்டு விஜய் நடித்த பிகில் படத்தில் அவர் வில்லனாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X