பிரபல நடிகர் காதர் கான் மரணம்: புத்தாண்டு அன்று சோகத்தில் பாலிவுட்

By Siva

டொரண்டோ: பிரபல பாலிவுட் நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான காதர் கான் இன்று காலமானார்.

பிரபல பாலிவுட் நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான காதர் கான் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது.

Bollywood actor Kader Khan no more

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 81. முன்னதாக அவர் உயிருடன் இருந்தபோதே அவர் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

அவரின் இறுதிச் சடங்கு டொரண்டோவில் நடக்க உள்ளது. அவருக்கு ஹாஜிரா என்ற மனைவியும், சர்ஃபராஸ் என்ற மகனும் உள்ளனர்.

காதர் கான் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார். மேலும் 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். 45 ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்துள்ளார். 1990களில் டேவிட் தவான், கோவிந்தாவுடன் சேர்ந்து சாஜன் சலே சசுரால், ஹீரோ நம்பர் ஒன், கூலி நம்பர் ஒன், துல்ஹே ராஜா, ஹசீனா மான் ஜாயேகி ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

காதர் கானின் மறைவு குறித்து அறிந்த பாலிவுட் பிரபலங்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X