அந்தகாரம் முன்னோட்டம்..பாலிவுட் பிரபலம் வாழ்த்து.. அட்லி ட்விட்டரில் நன்றி !
சென்னை : அந்தகாரம் முன்னோட்டத்திற்கு வாழ்த்து கூறிய பாலிவுட் பிரபலத்திற்கு இயக்குனர் அட்லி ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்
இயக்குனர் அட்லி தற்போது தனது தயாரிப்பின் கீழ் அந்தகாரம் என்கிற படத்தை தயாரித்து வருகிறார். இது இயக்குனர் அட்லி சங்கிலி புங்கிலி கதவ தொற படத்திற்கு பிறகு தயாரிக்கும் இரண்டாவது படமாகும்.

நேற்று அந்தகாரம் படத்தின் முன்னோட்டம் யூடியூப்பில் வெளியானது. இதனையடுத்து படக்குழுவுக்கும் முக்கியமாக இயக்குனர் அட்லிக்கும் ரசிகர்கள் பிரபலங்கள் என பலர் இணையத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதில் பாலிவுட் திரையுலகின் பிரபலமான இயக்குனர் கரண் ஜோகரும் ட்விட்டர் வாயிலாக அட்லிக்கு வாழ்த்து கூறியிருந்தார். அதில், அட்லியின் அந்தகாரம் முன்னோட்ட பதிவை பகிர்ந்த கரண் ஜோகர், நண்பர்களே இதை காணுங்கள் மற்றும் படத்தை காண மிகவும் ஆவலாக இருக்கிறது அட்லிக்கு வாழ்த்துக்கள் என்று கரண் ஜோகர் மகிழ்ச்சி பொங்க கூறியிருந்தார் .
கரண் ஜோகரின் வாழ்த்தை சற்றும் எதிர்பாராத இயக்குனர் அட்லி ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அதில் உங்கள் வார்த்தைகள் எங்களின் சிறிய உழைப்பை பெரிதாக்குகிறது, மேலும் உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி இதை விட வேறு எதுவும் வேண்டாம் மீண்டும் உங்களின் வாழ்த்துக்கு நன்றி என்று ஆனந்தமாய் கரண் ஜோகருக்கு நன்றி தெரிவித்துள்ளார் அட்லி.
கரண் ஜோகர் ஒரு தொகுப்பாளர், நடிகர், இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என்று பன்முகங்களை கொண்டவர். நல்ல படைப்புகளை எப்போதும் ஆதரிக்க கூடிய கரண் ஜோகர் அவ்வாறே அந்தகாரம் படத்தின் முன்னோட்டத்தையும் பாராட்டியுள்ளார்

அட்லி பிகில் படத்திற்கு பின் யாரை வைத்து படம் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ள நிலையில் சட்டென்று தான் தயாரித்துள்ள படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டு ஆச்சரியபடுத்தியுள்ளார். இதே நேரத்தில் அட்லி அடுத்ததாக ஷாருக்கானுடன் இணைய போகிறாரா இல்லை மீண்டும் விஜயுடன் இணைய போகிறாரா என்று செய்திகள் வந்து கொண்டிருக்கும் நேரத்தில் அட்லியிடம் இருந்து இதுவரையில் எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தகாரம் படத்தில் வினோத் கிஷன், அர்ஜுன் தாஸ், பூஜா ராமச்சந்திரன், குமார் நடராஜன், மிஷா கோஷல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை இயக்கி வருகிறார் விக்னராஜன். படத்திற்கு இசையமைத்து இருக்கிறார் பிரதீப் குமார் படத்தின் முன்னோட்டம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையிலும் முன்னோட்டம் வெளியான சிறிது நேரத்திலே 6 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











