Don't Miss!
- News
பட்டாக்கத்தி..பாட்டில் வீச்சு..பட்டப்பகலில் கல்லூரி மாணவர்கள் மோதல்..பதறிய மெரீனா..4 பேர் கைது
- Finance
இந்தியாவின் முதல் பட்ஜெட்..? நிர்மலா சீதாராமன் பட்ஜெட் சாதனை..! #Budget2023
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Technology
ஏலியன் இருக்கா? AI ரோபோட் கண்டறிந்த 8 சிக்னல்.! வாய் பிளந்த விஞ்ஞானிகள்.! டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட்.!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
என் உடலை ஏன் காட்டக்கூடாது?அடுத்த நிர்வாண போட்டோஷூட்..என்ன இப்படி ஆரம்பிச்சுட்டாங்க!
மும்பை : பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண போட்டோஷூட்டைத் தொடர்ந்து நடிகர் குணால் வர்மா நிர்வாண புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிப்பை தாண்டி மாடலிங்கில் கவனம் செலுத்தி வரும் ரன்வீர் சிங், வித்தியாசமான ஆடைகள் அணிவது, ஹேர்ஸ்டைல் வைத்துக் கொள்வது என அவ்வப்போது போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், ரன்வீர் பத்திரிக்கை ஒன்றுக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார். ரன்வீரின் இந்த நிர்வாண போட்டோஷூட்டிற்கு சமூக வலைதளங்களில் ஏராளமான எதிர்ப்புகள் கிளப்பின.
தென்னிந்தியாவுல இந்த நடிகரோட நடிக்கத்தான் ஜான்விக்கு ஆசையாம்.. யார் அந்த ஹீரோ தெரியுமா?

பெண்களை புண்படுத்திவிட்டார்
பெங்காலி நடிகையும் அரசியல்வாதியுமான மிமி சக்ரவர்த்தி, ரன்வீர் சிங்கின் புகைப்படத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு, பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்திவிட்டதாகக் கூறி மும்பை செம்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் ஆதரிக்கிறோம், ஆனால் நீங்கள் சமூகத்தில் நிர்வாணமாக உலாவ வேண்டும் என்று அர்த்தமல்ல என்று அந்த புகார் மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

விஷ்ணு விஷால்
ரன்வீர் சிங் மீதான புகார் அடங்குவதற்குள், தமிழ் நடிகரான விஷ்ணு விஷால் தனது அடுத்த படமான மோகன்தாஸ் படத்திற்கு ப்ரமோஷன் செய்யும் நோக்கில், தனது பெட்ரூமில் இருந்தபடி நிர்வாண போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். ரன்வீர் சிங் போல விஷ்ணு விஷாலும் படுக்கை அறையில் படுத்துக்கொண்டு போட்டோ எடுத்தது சர்ச்சைக்குள்ளானது.

நடிகர் குணால் வர்மா
அந்த புகைப்படத்தின் சர்ச்சை அடக்குவதற்குள்ளே பாலிவுட் நடிகர் குணால் வர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிர்வாண புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக என்னிடம் செலவு செய்வதற்கு பணம் குறைவாகவே உள்ளது. அதனால் அதை என் உடலுக்குச் செலவழிக்கத் தேர்ந்தெடுத்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

என் உடலை ஏன் காட்டக்கூடாது?
இது குறித்து, பேட்டி அளித்துள்ள பாலிவுட் நடிகர் குணால் வர்மா, ரன்வீர் சிங் அனைத்து தடைகளையும் தாண்டி புகைப்படத்தை வெளியிட்டு, முன் முயற்சி எடுத்துள்ளார். மேலும், நான் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறேன், என் உடலை ஏன் காட்டக்கூடாது? என்று கேட்டுள்ளார். மேலும், இந்த புகைப்படத்தை என் மனைவி எடுத்ததாக அழகாச சிரித்துக் கொண்டே கூறினார். ரன்வீர் சிங்கின் போட்டோஷூட்டிற்கு பிறகு பலரும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள இவ்வாறு போட்டோஷூட் நடத்தி வருகின்றனர்.