மகாராஷ்ட்ராவில் மீண்டும் ஆரம்பமான கொரோனா ஆட்டம்.. பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா பாதிப்பு

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சத்யா, கேங்ஸ் ஆஃப் வாசிப்பர் என ஏகப்பட்ட பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர்.

அமேசான் பிரைமில் ஒளிபரப்பான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மிகப்பெரிய ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

பிசியான நடிகர்கள்

பிசியான நடிகர்கள்

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து விட்டது என்று கூறி தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி, படப்பிடிப்புக்கு அனுமதி என அரசு அனுமதியளிக்க நிறுத்தி வைத்திருந்த படப்பிடிப்புகள் எல்லாம் மீண்டும் துவங்கப்பட்டு நடிகர்கள் பிசியாகி உள்ளனர்.

மகாராஷ்ட்ராவில் மறுபடியும்

மகாராஷ்ட்ராவில் மறுபடியும்

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தான் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு தாண்டவமாடியது. சில மாதங்களாக குறைந்திருந்த பாதிப்பு மீண்டும் நாடு முழுவதும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்ட்ராவில் கொரோனா தாக்கம் அதிகவேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரன்பீர் கபூருக்கு கொரோனா

ரன்பீர் கபூருக்கு கொரோனா

பிரபல பாலிவு நடிகர் ரன்பீர் கபூருக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் ரன்பீர் கபூர். இந்நிலையில், இன்னொரு பிரபல பாலிவுட் நடிகருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பி உள்ளது.

மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா

மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா

ரன்பீர் கபூரை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு கொரோனா பாசிட்டிவ் ஆகி இருக்கிறது. மருத்துவ சிகிச்சைகளை பெற்ற மனோஜ் பாஜ்பாய் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக அவரது குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், மனோஜ் பாஜ்பாயின் உடல் நலம் சீராக உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள்

நிறுத்தப்பட்ட படப்பிடிப்புகள்

ரோனி ஸ்க்ரூவாலா தயாரிப்பில் இயக்குநர் கனு பெல் இயக்கத்தில் உருவாகி வரும் டெஸ்பேட்ச் படத்தில் நடித்து வருகிறார் மனோஜ் பாஜ்பாய். லண்டன், டெல்லி மற்றும் மும்பையில் அதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு சில மாதங்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

உஷார் நிலை

உஷார் நிலை

மகாராஷ்ட்ராவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால், பாலிவுட் நடிகர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மகாராஷ்ட்ரா மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது. மீண்டும் மாநிலம் தழுவிய லாக்டவுனை அமல்படுத்தவும் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X