ஆஸ்கருக்கு நிகரான எம்மி விருது.. தட்டிச்சென்றது ரஜினி பட வில்லன் நடித்த டிவி தொடர்!

நியூயார்க்: ஆஸ்கருக்கு நிகரான எம்மி விருது நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்த பிரிட்டன் தொடருக்கு வழங்கப்பட்டது.

சிறந்த தொலைக்காட்சித் தொடர்களுக்காக வழங்கப்படும் 47வது சர்வதேச எம்மி விருது நியூயார்க்கில் நடைபெற்றது. திரைப்படத்துறையில் ஆஸ்கர் விருது எவ்வளவு உயர்வானதோ அந்தளவுக்கு தொலைக்காட்சி தொடர்களுக்கான உயரிய விருது எம்மி விருது.

இந்த எம்மி விருது விழாவில் தொலைக்காட்சி தொடர் பிரிவில் இந்தியா சார்பில் 'சேக்ரெட் கேம்ஸ்' சீரிஸும், வெப் மூவீஸ் பிரிவில் 'லஸ்ட் ஸ்டோரீஸ்' திரைப்படமும் பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

ராதிகா ஆப்தே

ராதிகா ஆப்தே

சிறந்த நடிகைக்கான விருதுக்கு ராதிகா ஆப்தேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த விருது விழா நியூயார்க்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.

8 பேர் பங்கேற்பு

8 பேர் பங்கேற்பு

இந்த விருது விழாவில் இந்தியா சார்பில் இயக்குநர் அனுராக் காஷ்யப், ராதிகா ஆப்தே, நவாசுதின் சித்திக், குப்ரா செய்ட், கரண் ஜோஹர், ஜோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, விக்கிரமாதித்யா, ரோனி ஸ்க்ரீவாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பெரிய விஷயம்

பெரிய விஷயம்

இந்திய நடிகர்களுக்கோ நடிகைகளுக்கோ அல்லது படைப்புகளுக்கோ எம்மி அவார்ட்ஸ் 2019ல் எந்த விருதும் கிடைக்கவில்லை. ஆனாலும் சர்வதேச எம்மி விருதுகளுக்கு இந்தியாவில் இருந்து இத்தனை பேர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் டிராமா

பிரிட்டன் டிராமா

இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த நடிகர் நவாசுதீன் சித்திக் நடித்த பிரிட்டன் சீரிஸ்க்கு சிறந்த டிராமா சீரிஸ்க்கான விருது வழங்கப்பட்டது. பாலிவுட் நடிகரான நவாசுதீன் சித்திக் தமிழில் பேட்ட படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்திருப்பார்.

மகிழ்ச்சி

அவர் நடித்த பிரிட்டன் டிராமா தொடரான மெக்மாஃபியாவுக்கு சிறந்த டிராமா சீரிஸ்க்கான விருது கிடைத்திருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் நவாசுதீன் சித்திக், தான் நடித்த சீரிஸுக்கு எம்மி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X