கார் விபத்தில் படுகாயம்.. ஐசியுவில் இருக்கும் நடிகையின் கணவர்.. கண்ணீரில் பிரசாந்த் பட நடிகை!

சென்னை: கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தலையிலோ, முகத்திலோ எந்த காயமும் இல்லை என்றும், ஆனால், முதுகு வலியும், முழங்கால் வலியும் இருப்பதால், சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ, எக்ஸ்ரேக்கள் எடுக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான பர்வின் தபாஸ்,1999 ஆம் ஆண்டு தில்லகி படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கினார். இதைத்தொடர்ந்து 2001ஆம் ஆண்டு மீரா நாயகரின் திரைப்படமான மான்சூன் வெட்டிங் திரைப்படம் விமர்சன ரீதியாக பெரும் பாராட்டை பெற்றது. மேலும், தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை, கோஸ்லா கா கோஸ்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர், இந்தி படம் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

accident

கார் விபத்தில் சிக்கினார்: இந்நிலையில், நடிகர் பர்வின் தபாஸ் சனிக்கிழமை காலை சாலை விபத்தில் மும்பையில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், பர்வின் தபாஸ் சனிக்கிழமை அதிகாலை கார் விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதைத் வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை கொடுத்து வருகின்றனர். அவரை அவரது மனைவி ப்ரீத்தி ஜாங்கியானி உடன் இருந்து கவனித்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது.

நடிகை ப்ரீத்தி ஜாங்கியானி: இதுகுறித்து, நடிகரின் மனைவியும் நடிகையுமான ப்ரீத்தி ஜாங்கியானி வெளியிட்ட அறிக்கையில், நானும் எனது குடும்பத்தினரும் பேரதிர்ச்சியில் இருக்கிறோம், பேச முடியவில்லை. அவருக்கு தலையிலோ, முகத்திலோ காயம் இல்லை இருந்த போதும், தலையில் ஏதேனும் ரத்தக்கட்டு உள்ளதாக என்று பார்க்க மருத்துவர்கள் CT ஸ்கேன் மற்றும் பிற சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு வேலை அதிகமாக இருந்ததால், இரவில் வேலை செய்துவிட்டு, அதிகாலையில் வாகனம் ஓட்டிய போது இந்த விபத்து ஏற்பட்டதாக ப்ரீத்தி ஜாங்கியானி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் படத்தில்: நடிகர் பர்வின் தாபாஸும், ப்ரீத்தியும் கடந்த 2008ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நடிகை ப்ரீத்தி ஜாங்கியானியை தமிழில் நடிகர் பிரசாந்திற்கு ஜோடியாக ஹலோ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, அவர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை. நடிகை ப்ரீத்தி ஜாங்கியானி இந்தி மட்டுமில்லாமல், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாள படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர், தற்போது வெப் தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.

More from Filmibeat

Read more about: accident விபத்து
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X