நான் விஜய்யின் தீவிர ரசிகன்.. மாஸ்டர் படத்தை பார்த்து மிரண்டு விட்டேன்.. அதிரவைத்த பாலிவுட் நடிகர் !
சென்னை : நான் நடிகர் விஜய்யின் மிகப்பெரிய ரசிகன் என்று பிரபல பாலிவுட் நடிகர் கூறியுள்ளார்.
300 கோடி பட்ஜெட்டில் படு மிரட்டலாக உருவாகி உள்ளத் திரைப்படம் பிரம்மாஸ்த்ரா. இத்திரைப்படத்தின் டிரைலர் ஜூன் 15ந் தேதி வெளியாக உள்ளது.
இரண்டு பாகமாக வெளியாக உள்ள இத்திரைப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9ந் தேதி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

பிரம்மாஸ்த்ரா
இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, மெளனி ராய் மற்றும் சிறப்பு தோற்றத்தில் ஷாருக்கான் என ஏகப்பட்ட பிரபலங்கள் இந்த பிரம்மாஸ்த்ரா படத்தில் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இத்திரைப்படம் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நடத்துவதில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டது.

மாயாஜாலங்கள் நிறைந்த படம்
இதிகாச தொடர்புடைய படமாகவே இந்த பிரம்மாஸ்த்ரா படம் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் முதல் பாக டீசரில் ரன்பீர் கபூர், ஆலியா பட், மெளனி ராய், அமிதா பச்சன் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். மாயாஜாலங்கள் நிறைந்த படமாக இந்த படம் உருவாகி உள்ளது.

அதிகரித்துள்ள எதிர்பார்ப்பு
நாகினி தொடரில் நடித்த மௌனி ராய் இந்த திரைப்படத்தில் ஒரு முக்கியரோலில் நடித்துள்ளார். அக்ஷய் குமார் நடித்த 'சாம்ராஜ் பிருத்விராஜ்' திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் ரூ.55 கோடியை மட்டுமே வசூலித்து திரையரங்குகளிலிருந்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், பிரம்மாஸ்த்ரா திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய்யின் தீவிர ரசிகன்
ஆலியா பட், ரன்பூர் கபூர் நடித்துள்ள பிரம்மாஸ்த்ரா திரைப்படம் செப்டம்பர் மாதம் 9ந் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தை ப்ரோமோஷன் செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து, செய்தி ஊடகம் ஒன்றுக்கு ரன்பீர் கபூர் பேட்டி அளித்துள்ளார். அதில், நான் தளபதி விஜய் சாரோட மிகப்பெரிய ரசிகன். ரஜினி, அஜித், சூர்யா அவர்களையும் எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

தமிழ் படங்களை விரும்பி பார்ப்பேன்
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்து மிரட்டு விட்டேன். அந்த படத்தில் வரும் ஒவ்வொரு சீனும் நேச்சுரலாக இருக்கு, தமிழ் சினிமாவில் எடுக்கும் படங்களை பார்க்கும் போது மிகவும் எனர்ஜியாக இருக்கு. அதோட மட்டும் இல்லாமல் , வாழ்க்கைக்கு தேவையானதை சொல்லும் பாடமாகவும் தமிழ் படங்கள் இருக்கின்றன இதனால் தமிழ் படங்களுக்கு நான் தீவிர ரசிகன் என்றார். ரன்பூர் கபூர் விஜய்யின் தீவிர ரசிகன் என்று கூறியுள்ள வீடியோவை விஜய் ரசிகர்கள் டிராண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











