ஐஸ்வர்யா ராய்க்காக சல்மான் கான் செய்த செயல்.. இப்படி எல்லாம் நடந்திருக்கா?
சென்னை: பாலிவுட் சூப்பர் ஸ்டாரான சல்மான் கான் 59 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். ஆனால், இவர் தன்னுடன் நடிந்த பல நடிகைகளை காதலித்து அவர்களுடன் உறவில் இருந்துள்ளார். அப்படி உலக அழகி ஐஸ்வர்யா ராயை காதலித்த போது அவருக்கு பல கண்டிஷன்களை போட்டு தொல்லை கொடுத்தது மட்டுமில்லாமல், நள்ளிரவில் கதவை திறக்க சொல்லி கொடுமைப்படுத்தி இருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராய் 1994 ஆம் ஆண்டு தனது 21 வயதில் மிஸ் வேர்ல்ட் பட்டத்தை பெற்றார். இதைத்தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய இருவர், படத்தில் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, ஆங்கிலம் என அனைத்து மொழிப்படங்களிலும் நடித்தார். கடந்த ஆண்டு இவர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

சல்மான் கான், ஐஸ்வர்யா ராய்: சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ஹம் தில் தே சுகே சனம் படத்தில் சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் ஜோடி போட்டு நடித்தனர். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அந்த படத்தில் நடித்தபோது சல்மான் கானுக்கும், ஐஸ்வர்யா ராய்க்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ரீல் ஜோடியாக இருந்த இவர்கள் ரியல் ஜோடியாக பல இடங்களில் சுற்றிவந்தனர். ஆனால், இவர்களின் காதல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நிலைக்கவில்லை, சல்மான் கான், ஐஸ்வர்யா ராயிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டதாகவும், ஐஸ்வர்யா ராயை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்க முயற்சி செய்ததாகவும், சல்மானின் அனுமதி இல்லாமல் எந்த படத்திற்கும் கையெழுத்து போடக்கூடாது, எந்த நடிகருடனும் நெருக்கமாக நடிக்கக்கூடாது என்று பல கண்டிஷன்களை போட்டுள்ளார்.

நள்ளிரவில் டார்ச்சர்: இதனால், மனம் வெறுத்துப்போன ஐஸ்வர்யா, சல்மான் கானை பார்ப்பதை தவிர்த்துவிட்டு, வீட்டை விட்டு வெளியில் வராமலே பல நாட்கள் வீட்டிற்குள்ளே இருந்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சல்மான் கான் ஒரு நாள் நள்ளிரவில் ஐஸ்வர்யா ராயின் வீட்டுக்கு வந்து கதவை தட்டியிருக்கிறார். இப்போது கதவை மட்டும் திறக்கவில்லை என்றால், 17வது மாடியில் இருந்த குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார். சல்மான் கத்திய சத்தத்தை கேட்டு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தவர்கள் விழித்துக்கொண்டதால், ஐஸ்வர்யா ராய் திறந்து இருக்கிறார். இதுகுறித்து ஐஸ்வர்யா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று ஐஸ்வர்யா ராய் காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

திருமணம்: அதன்பிறகு தான் 2007ம் ஆண்டு பாலிவுட் ஸ்டார் அமிதாப் பச்சனின் மகன், அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். ஆனால், தற்போது ஐஸ்வர்யா ராயும், அபிஷேக்கும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்றும் இவர்களின் பிரிவுக்கு சொத்து பிரச்சனை காரணம் என்றும் தினம் தினம் பலவிதமான செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன.


Click it and Unblock the Notifications











