வாவ்... செம.. டொக் டொக்.. அஜித்தை இமிட்டேட் செய்த சல்மான் கான்.. வைரலாகும் வீடியோ!
சென்னை: நடிகர் சல்மான் கான் நடிகர் அஜித் போன்று இமிடேட் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான் கான். இவருக்கு நாடு முழுவதும் ரசிகைகள் உண்டு. தற்போது இந்தி பிக்பாஸ் சீசன் 13 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இவரது நடிப்பில் அண்மையில் வெளியான தபாங் 3 படம் திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. கடந்த பாகங்களை போலவே இந்த படத்திலும் ஆக்ஷனில் பட்டையை கிளப்பியிருக்கிறார் சல்மான் கான்.

ஜீ தமிழ் தொலைக்காட்சி
இந்நிலையில் சல்மான் கான் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் சல்மான் கான், ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ளார்.
டொக் டொக்...
அதில் நிகழ்ச்சி தொகுப்பாளினியான அர்ச்சனா, சல்மான் கானிடம் அஜித்தின் படத்தை காண்பிக்க அவர், டொக் டொக் என வாலி படத்தில் அஜித் செய்த ஸ்டைலை காண்பித்து அசத்தி விட்டார்.

வாலி படம்
சல்மான் கான் அஜித்தால் அட்மையரான அந்தக் காட்சியை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். நடிகர் அஜித் நடிப்பில் 1999ஆம் ஆண்டு வெளியான வாலி படம் செம ஹிட்டானது.

இரட்டை வேடத்தில்
எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் உருவான இப்படம் கர்நாடகாவில் 100 நாட்களுக்கு மேல் ஓடியது அந்தப்படம். அதில் இரட்டை வேடத்தில் நடித்திருந்த அஜித்தின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

கவரப்பட்ட சல்மான் கான்
வாலி படத்தில் அஜித் டொக் டொக் என இரண்டு கைகளை இந்தப் பக்கமும் அந்தப்பக்கம் அசைப்பார். அப்போது அந்த ஸ்டைல் பெரிதும் கவரப்பட்டது. அதனால் கவரப்பட்ட சல்மான் கானும் அதையே செய்து அசத்தியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











