விஜய்யுடன் மோதிப்பார்க்க ரெடி? காஷ்மீர் பறந்த ஆதிரா.. இனிமே தரமான சம்பவம் தான்!
சென்னை : லியோ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் சஞ்சய் தத் விமானம் மூலம் காஷ்மீர் சென்றார்.
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் மீண்டும் இணையும் படத்திற்கு 'லியோ' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது
மெகா பட்ஜெட்டில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இப்படம் அக்டோபர் மாதம் 19ந் தேதி வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜின் விக்ரம் படத்தின் மகத்தான வெற்றிக்குபின் விஜய்67வது படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில், த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜூன், மலையாள நடிகர் மேத்யூ ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் படப்பிடிப்பு கடந்த மாதம் பிப்ரவரி முதல் நடைபெற்று வருகிறது.

காஷ்மீர் பறக்கும் ஆதிரா
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் மிஷ்கின், கௌதம் மேனன் ஆகியோரின் போர்ஷன்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் சஞ்சய் தத் காஷ்மீர் புறப்பட்டு சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. அவர் விமான நிலையத்தில் பிளாக் அண்ட் பிளாக் உடையில் அட்டகாசமாக எண்ட்ரி கொடுத்திருந்தார். சஞ்சய் தத் லியோ படத்தின் படப்பிடிப்பில் இரண்டு வாரம் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

தமிழில் எண்ட்ரி
பாலிவுட்டில் பிரபலமான வில்லன் நடிகரான சஞ்சய் தத், பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் மிரட்டலான வில்லனாக ஆதிரா கதாபாத்திரத்தில் அனைவரையும் நடுங்க வைத்திருந்தார். கேஜிஎஃப் படம் மூலம் உலகம் முழுவதும் பரீட்சியமான சஞ்சய் தத் லியோ படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுக்க உள்ளார்.

அதிநவீன கேமரா
லியோ படத்திற்காக வி ராப்டார் எக்ஸ் எல் என்ற அதிநவீன கேமரா பயன்படுத்தப்பட உள்ளது. இந்த அதிநவீன கேமரா பயன்படுத்தப்படுவது இதுதான் முதன்முறை. அதோடு இந்த கேமராவோடு இரண்டு ரேப்டர்கள் மற்றும் பேபி கமோடாவும் பயன்படுத்தப்படுகிறது. லியோ படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் முடிக்கப்பட்டு படக்குழுவினர் அனைவரும் சென்னை திரும்பி விடுவார்கள் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











