SK23: சிவகார்த்திகேயனுடன் மோதும் பாலிவுட் ஹீரோ.. அதிபயங்கரமாக உருவாகும் எஸ்கே23 பட ஆக்ஷன் காட்சிகள்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கி வரும் சூழலில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
விரைவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அமரன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், எஸ்கே 23 படத்தை தொடர்ந்து அடுத்ததாக வெங்கட் பிரபு மற்றும் சிபிச் சக்கரவர்த்தி இயக்கங்களில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சென்னையில் நடைபெற்று வரும் எஸ்கே 23 பட சூட்டிங்கில் பிரபல பாலிவுட் நடிகர் இணைந்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து நடிகராகவும் தயாரிப்பாளராகவும் பாடகராகவும் பாடலாசிரியராகவும் கோலிவுட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில் அவரது மாவீரன், அயலான் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்து வெற்றி படங்களாக அமைந்துள்ளன. இந்நிலையில் அடுத்ததாக அமரன் படம் சிவகார்த்திகேயன் நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள சூழலில் படம் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் மாதம் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆக்ஷன் காட்சிகளின் சூட்டிங்: இந்நிலையில் தற்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ள சூழலில் படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது சென்னையில் நடந்து வரும் சூழலில் சஞ்சய் தத்தும் இந்த சூட்டிங்கில் இணைந்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயன் -சஞ்சய் தத் இருவரும் இணைந்து அதி பயங்கரமான ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சல்மான் படத்தில் ஏஆர் முருகதாஸ்: படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் இணைந்துள்ளார். மேலும் பிஜு மேனன் உள்ளிட்டவர்களும் படத்தின் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்துவரும் இந்தப் படத்தில் பிரபல மலையாள ஒளிப்பதிவாளர் சுதீப் இளமன் இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்தை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக பாலிவுட்டில் சல்மான் கான் படத்தில் ஏஆர் முருகதாஸ் இணைவுள்ளார். இதனிடையே சிவகார்த்திகேயனும் அடுத்ததாக வெங்கட் பிரபு மற்றும் சிபி சக்ரவர்த்தி கூட்டணியில் அடுத்தடுத்து இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது
ஒரே நேரத்தில் இரு படங்கள்: சல்மான் கானுடன் ஏஆர் முருகதாஸ் இணையவுள்ள சிக்கந்தர் படத்தின் சூட்டிங் இம்மாதத்திலேயே துவங்கவுள்ளதாகவும் இந்தப் படத்துடன் எஸ்கே23 படத்தையும் ஒரே நேரத்தில் அவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே எஸ்கே23 படத்தில் கேமியோ ரோலில் சல்மான் கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக எஸ்கே23 படத்தில் மிருணாள் தாகூர் இணையவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், படத்தின் நாயகியாக ருக்மிணி வசந்தை இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











