Don't Miss!
- News
அப்பவே "அரசியலமைப்பு" இருந்திருக்கு! தமிழ்நாடு உத்திரமேரூர் கல்வெட்டு! புகழ்ந்து தள்ளிய பிரதமர் மோடி
- Lifestyle
இந்த 3 ஃபேஸ் மாஸ்க்குகளை நீங்க யூஸ் பண்ணா... உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்குமாம் தெரியுமா?
- Sports
தீபக் ஹூடா சரிப்பட்டு வர மாட்டாரு.. இந்திய அணியில் மாற்றம் தேவை.. தினேஷ் கார்த்திக் வலியுறுத்தல்
- Finance
Gold: வரலாற்று உச்சத்தில் தங்கம் விலை.. இப்ப வாங்கலாமா.. நிபுணர்கள் என்ன சொல்றாங்க தெரியுமா?
- Technology
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- Automobiles
ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் முதல் சர்வீசுக்கான செலவு எவ்வளவு தெரியுமா? நம்பவே முடியல இவ்ளோ
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
தனுஷூடன் மோதும் கே.ஜி.எஃப் வில்லன்…சம்பளம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?
சென்னை : இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் கே.ஜி.எஃப் வில்லன் கமிட்டாகி உள்ளார்.
நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில், நானே வருவேன் படத்தில் நடித்திருந்தார். செப்டம்பர் மாதம் வெளியான இப்படம் திரையரங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்டது.
இந்தப்படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்துள்ள வாத்தி திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தில் பாலமுருகன் எனும் கதாபாத்திரத்தில் ஆசிரியராக அவர் நடித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இயக்குனர் பேரரசுக்கு கைலாச தர்ம ரட்சகா விருது..ஆதரவாக என்றும் நான் இருப்பேன்..நித்தியானந்தா பேச்சு!

கேப்டன் மில்லர்
ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் கேப்டன் மில்லர் திரைப்படத்தை இயக்கி வருகிறார். பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தின் அட்டகாசமான போஸ்டர் வெளியாகி உள்ளது. இப்படத்தில், தனுஷூக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

முக்கிய கதாபாத்திரத்தில்
இப்படத்தில், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கென், இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தனுஷின் தொடரி, பட்டாஸ், மாறன் படங்களை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தையும் தயாரித்துள்ளது.

கம்முலா இயக்கத்தில்
இந்த படத்தைத் தொடர்ந்து முன்னணி இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தனுஷின் இரண்டாவது தெலுங்கு படமாகும். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதோடு நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்புகளை விரைவில் வெளியாக உள்ளது.

முக்கிய ரோலில்
இந்நிலையில், இப்படத்தில் தனுஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சஞ்சய் தத் நடிக்க 10 கோடி வரை கேட்பதாக கூறப்படுகிறது. நடிகர் சஞ்சய் தத் கேஜிஎஃப் 2 திரைப்படத்தில், யாத்ரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். கேஜிஎஃப் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி வசூலைவாரிக்குவித்தது.