“தளபதி 67“ ஒன் லைன் கேட்டே மிரண்டு விட்டேன்.. அதிரடியான அடுத்தடுத்த அப்டேட்!

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது

விஜய்யின் வாரிசு படம் பொங்கல் பண்டியையொட்டி ஜனவரி 11ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. வாரிசு படத்தின் வெளியீட்டுக்குப்பின் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிப்பார் என்பதால், வாரிசு பட வெளியீட்டுக்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.

வாரிசு படம் வெளியானதுமே, தளபதி 67 திரைப்படம் குறித்த அப்டேட்டை கேட்டு இணையத்தில் ரசிகர்கள் நச்சரிக்கத் தொடங்கிவிட்டனர்.

தளபதி 67

தளபதி 67

மாநகரம்,கைதி, மாஸ்டர், விக்ரம் என்ற அடுத்தடுத்த பிளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தில் விஜய்யுடன் மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தின் அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்களுக்கு செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தரமான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

அனிருத் இசையில்

அனிருத் இசையில்

இதில், கடந்த ஜனவரி 2-ஆம் தேதி இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கியதாகவும், இசையமைப்பாளர் அனிருத்,வசன கர்த்தாவாக லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்ன வேல் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் பணியாற்றுவார்கள் என்றும், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, சண்டைப் பயிற்சியாளராக அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை இயக்குநராக சதீஷ் குமார் என படத்தின் தொழில்நுட்ப குழுவினரின் பெயரை அறிவித்தது.

ஓகே சொன்ன சஞ்சய் தத்

ஓகே சொன்ன சஞ்சய் தத்

இதையடுத்து தளபதி 67 படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகை விவரங்களை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்து வருகிறது. இதில், தமிழ் சினிமாவுக்கு சஞ்சய் தத்தை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள போஸ்டரில், தளபதி 67 படத்தின் ஒன் லைன் கதையை கேட்டதுமே நான் மிரண்டுவிட்டேன், இந்த படத்தில், நான் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டேன். இந்தப் பயணத்தை தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன் என சஞ்சய் தத் கூறியுள்ளார்.

படுமோசமான வில்லன்

படுமோசமான வில்லன்

நடிகர் சஞ்சய் தத் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் 2 படத்தில் ஆதீரா என்கிற படுமோசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது, தளபதி 67 படத்தில் சஞ்சய் தத் இணைந்துள்ளதால், இப்படத்திலும், படுமோசமான வில்லனாகவே நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி 67 திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் இன்று திக்குமுக்காடி போனார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X