துபாய் அரசின் கோல்டன் விசாவை பெற்ற பிரபல நடிகர்.. சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்து!

சென்னை: துபாய் அரசின் கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் பெற்றுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் இந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். ஏராளமான ரசிகர்களையும் கொண்டுள்ளார் சஞ்சய் தத்.

சஞ்சய் தத் நுரையீரல் புற்று நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புற்று நோய் அறக்கட்டளை

புற்று நோய் அறக்கட்டளை

தொடர்ந்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார் சஞ்சய் தத். ஏற்கனவே புற்று நோயால் சஞ்சய் தத்தின் மனைவியும் தாயும் பலியானார்கள். இதனை தொடர்ந்து சஞ்சய் தத்தின் சகோதரியான பிரியா தத் புற்றுநோய் அறக்கட்டளையை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறார்.

கடந்த லாக்டவுனின் போது

கடந்த லாக்டவுனின் போது

இதனிடையே சஞ்சய் தத் அடிக்கடி குடும்பத்துடன் துபாய் சென்று தங்குவது வழக்கம். கடந்த ஆண்டு லாக்டவுன் நேரத்தில் கூட சஞ்சய் தத்தின் மனைவி மான்யா தத் துபாயில் தனியாக சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் விசா

கோல்டன் விசா

இந்நிலையில் துபாய் அரசு நடிகர் சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. அமீரக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது.

அமீரகத்தில் வசிக்க விரும்புபவர்கள்

அமீரகத்தில் வசிக்க விரும்புபவர்கள்

இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விஐபிக்கள் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது.

கோல்டன் விசா

கோல்டன் விசா

இந்த விசா புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது. இந்த விசாவை பெற பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் விண்ணப்பித்தார். இதனை பரிசீலனை செய்த துபாய் அரசு சஞ்சய் தத்துக்கு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

தான் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசா பெற்றுள்ள தகவலை நடிகர் சஞ்சய் தத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X