Don't Miss!
- News
"புதிய கல்வி கொள்கை.. அதில் இருக்கும் நல்லதை எடுத்துக்கலாம்.. தப்பில்லை.." அமைச்சர் பொன்முடி பேச்சு
- Finance
Budget 2023: வங்கிகளுக்கு மூலதனம் ஒதுக்கீடு இருக்க வாய்ப்பில்லையாம்..அப்படின்னா கடன்?
- Sports
உலககோப்பை ஹாக்கி - வெளியேறியது இந்தியா.. பெனால்டி சூட் அவுட்டில் நியூசியிடம் தோல்வி.. சோகம்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
விஜய்யை சந்தித்த ஷாருக்கான் -அட்லி.. எங்க போய் பார்த்திருக்காங்க தெரியுமா?
சென்னை : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் சென்னையில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பைட்டிங் சீன்களை தொடர்ந்து டூயட் காட்சிகளை எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் நடந்துவந்த ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்துள்ளது.
வாரிசு
படத்தில்
நான்
நடிக்கிறேனா..
இது
என்ன
புதுக்கதையா
இருக்கு..
குஷ்பூ
பளீச்!

விஜய்யின் வாரிசு சூட்டிங்
நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையின் இதன் அடுத்தடுத்த சூட்டிங்குகள் நடைபெற்று வருகின்றன. எண்ணூரில் படத்தின் சண்டைக் காட்சிகள் நடைபெற்று வந்தன. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கான சீன்களும் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வாரிசு படத்தின் டூயட் காட்சிகள்
இதையடுத்து கோகுலம் ஸ்டூடியோவில் படத்தின் டூயட் காட்சிகளும் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் ராஷ்மிகா -விஜய் இருவரும் இணையவுள்ள நிலையில், இந்த மாதத்திற்குள் ஏறக்குறைய படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டு விறுவிறுப்பாக சூட்டிங்கை எடுத்து வருகிறது.

ஜவான் படத்தின் சூட்டிங் நிறைவு
இதனிடையே சென்னையில் நடைபெற்று வந்த ஷாருக்கான் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங் நிறைவு பெற்றுள்ளது. இதில் விஜய் சேதுபதி, ஷாருக்கின் நேரடி காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த சூட்டிங்கில் தீபிகா படுகோனேவும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யை சந்தித்த ஷாருக் -அட்லி
மேலும் 250 பெண்கள் பங்கேற்ற பெரிய அளவிலான பைட் சீனும் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகறது. இதனிடையே, சென்னையை விட்டு கிளம்புவதற்கு முன்னதாக நடிகர் விஜய்யை அவருடைய சூட்டிங் ஸ்பாட்டில் நேரில் சென்று ஷாருக்கான் மற்றும் அட்லி சந்தித்துள்ளனர். அப்போது விஜய்யின் சூட்டிங்கையும் அவர்கள் பார்த்துள்ளனர்.

அடுத்தக்கட்ட சூட்டிங்
இந்த சந்திப்பின்போது அவர்கள் வாரிசு படம் குறித்து அதிகமாக பேசியதாக தெரிகிறது. இயக்குநர் வம்சியும் அவர்களுடன் இணைந்திருந்தார். இதையடுத்து மும்பை செல்லும் ஜவான் டீம், விரைவில் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரபரப்பை ஏற்படுத்திய சந்திப்பு
முன்னதாக அட்லியின் பிறந்தநாளின்போது ஷாருக்கான் மற்றும் விஜய் இருவரும் இணைந்து பங்கேற்ற நிலையில், தற்போது மீண்டும் இவர்கள் சந்தித்துள்ளனர். பாலிவுட் மற்றும் கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களின் இந்த சந்திப்பு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.