கோலிவுட் -பாலிவுட் சூப்பர்ஸ்டார்கள் சந்திப்பு.. எங்க, எப்ப சந்திச்சாங்க தெரியுமா?
சென்னை : கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார் மற்றும் பாலிவுட் சூப்பர்ஸ்டார் இருவரும் சென்னையில் சில தினங்களுக்கு முன்பு சந்தித்துக் கொண்டனர்.
ஜெயிலர் மற்றும் ஜவான் படங்களின் சூட்டிங் சென்னையில் நடைபெற்ற நிலையில் இவர்கள் இருவரின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
இதுகுறித்து கடந்த சில வாரங்களாகவே சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியான நிலையில் அட்லி மற்றும் ஷாருக் இருவரும் சென்று ரஜினியை சந்தித்துள்ளனர்.

ஷாருக்கான் ஜவான் படம்
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ஜவான் படம் அட்லி இயக்கத்தில் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

சென்னையில் சூட்டிங்
இந்தப் படத்தில் ஷாருக் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை ஆதித்யராம் பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இந்த சூட்டிங்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி கலந்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் ஜெயிலர் சூட்டிங்
மேலும் ஷாருக் உள்ளிட்ட படக்குழுவினர் இந்த சூட்டிங்கிறகாக சென்னை வந்துள்ள நிலையில், படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக அட்லி இயக்கத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இதே ஆதித்யராம் பிலிம் சிட்டியில் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் சூட்டிங்கும் நடைபெற்றது.

ரஜினியை சந்தித்த ஷாருக்கான்
இந்நிலையில் நடிகர் ரஜினியின் மிகப்பெரிய ரசிகரான ஷாருக்கான் கடந்த 7ம் தேதி நடிகர் ரஜினியை நேரில் சந்தித்து பேசியதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பின்போது இயக்குநர் அட்லியும் உடனிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ரஜினியின் ஜெயிலர் படம்
ரஜினியின் ஜெயிலர் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளனர். ரஜினியும் சில தினங்களுக்கு முன்பு சூட்டிங்கில் இணைந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











