நயன்தாரா ச்சோ ஸ்வீட்... ஜவான் படத்துல அவங்கள உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. ஷாருக்கான் உற்சாகம்!

சென்னை : நடிகர் ஷாருக்கானின் பதான் படம் சர்வதேச அளவில் கோடிகளை குவித்து வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் படம் ஜவான். இந்தப் படத்தில் அவர் இரட்டை வேடங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் படத்தின் மூலம் நடிகை நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாகிறார். படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கான்

நடிகர் ஷாருக்கானின் பதான் படம் கடந்த மாதம் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு வாரத்திலேயே படத்தின் கலெக்ஷன் 600 கோடி ரூபாய்களை தாண்டியுள்ள நிலையில், தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ்

அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ்

ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் நடிகை தீபிகா படுகோனே. 4 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகியுள்ள ஷாருக்கின் பதான் படம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஷாருக்கான் கமிட்டாகி வருகிறார். விரைவில் தூம் 4 படத்திலும் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜவான் படத்தில் ஷாருக்கான்

ஜவான் படத்தில் ஷாருக்கான்

இதனிடையே அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துவரும் ஜவான் படத்தின் சூட்டிங்கும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிப்பதாக கூறப்படும் நிலையில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

நயன்தாராவை பாராட்டிய ஷாருக்கான்

நயன்தாராவை பாராட்டிய ஷாருக்கான்

இந்தப் படம் மூலம் பாலிவுட்டிலும் நயன்தாரா என்ட்ரி கொடுத்துள்ளார். இதனிடையே பதான் படத்தின் சக்சஸையொட்டி ரசிகர்களிடம் ட்விட்டர் மூலம் பேசிய ஷாருக்கானிடம் நயன்தாரா குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாருக்கான், நயன்தாரா மிகவும் இனிமையானவர் என்றும் அவருக்கு பல மொழிகள் தெரிவதாகவும் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

நயன்தாரா நடிப்பு குறித்து ஷாருக்கான்

நயன்தாரா நடிப்பு குறித்து ஷாருக்கான்

நயன்தாராவுடன் இணைந்து நடித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ள ஷாருக்கான், ஜவான் படத்தில் நயன்தாராவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜவான் படத்தில் விஜய் சேதுபதி, பிரியா மணி, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் நடிகர், நடிகைகளும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 சாதிப்பாரா அட்லீ?

சாதிப்பாரா அட்லீ?

ஷாருக்கான் -அட்லீ காம்பினேஷனில் உருவாகிவரும் ஜவான் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. விஜய்யின் அடுத்தடுத்த ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீ, பாலிவுட்டிலும் ஜவான் படத்தின் மூலம் தன்னை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பதான் படம் ஷாருக்கிற்கு வெற்றிப்படமாக அமைந்துள்ள நிலையில், அடுத்ததாக ஜவான் படமும் மிகச்சிறந்த வெற்றியை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X