இரண்டு வாரங்களை கடந்தும் பட்டையை கிளப்பும் பதான்.. ரூ.1000 கோடியை நெருங்கும் வசூல்!
சென்னை : நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது பதான்.
ஷாருக்கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளதுடன், படத்தில் அவரது ரசிகர்களை கவரும் சிறப்பம்சங்கள் அதிகமாக இருந்ததால் படம் அனைவரையும் கவர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இரண்டு வாரங்களை படம் கடந்துள்ள நிலையில், தற்போது 800 கோடி ரூபாய்க்கும் மேலாக படத்தின் வசூல் காணப்படுகிறது.

நடிகர் ஷாருக்கான்
நடிகர் ஷாருக்கான், தீபிகா படுகோனே உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த மாதம் 25ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசானது பதான் படம். ஷாருக்கான் 4 ஆண்டுகள் இடைவெளியில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இதனால் முன்னதாக படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து காணப்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு
இந்நிலையில் பாலிவுட் பாட்ஷா என கொண்டாடப்படும் ஷாருக்கானின் படத்தில் ரசிகர்கள் எதையெல்லாம் எதிர்பார்த்து படம் பார்க்க போவார்களோ அந்த எதிர்பார்ப்பை படத்தின் இயக்குநர் சிறப்பாக பதான் படத்தில் கொடுத்துள்ளார். இதனால் படம் எதிர்பார்த்ததை காட்டிலும் மிகவும் சிறப்பான வசூலை கொடுத்து வருகிறது.

தொடர் சாதனையில் பதான் படம்
படம் சர்வதேச அளவில் 100 நாடுகளில் 2500 திரையரங்குகளில் வெளியானது. இந்த அளவிற்கு வெளியான இந்திய திரைப்படம் இதுதான் என்ற பெருமையும் பதான் படத்திற்கு கிடைத்துள்ளது. மேலும் லட்சக்கணக்கான டிக்கெட்டுகள் முதல் சில நாட்களிலேயே விற்பனை ஆகி சாதனை படைத்தது.

ரூ.800 கோடி வசூல்
இந்நிலையில் இந்தப் படம் கடந்த இரண்டு வாரங்களாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி இதுவரை 800 கோடி ரூபாய்க்கும் மேலாக வசூலித்துள்ளது. தொடர்ந்து அரங்கு கொள்ளாத காட்சிகளாக ஓடி வருகிறது. பாலிவுட்டில் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் எதிர்பார்த்ததை காட்டிலும் பதான் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

பதான் படத்தின் வசூல் கணிப்பு
படம் கண்டிப்பாக 1000 கோடி ரூபாய் வசூலை தாண்டும் என்று சினிமா ட்ராக்கர்கள் கணித்துள்ளனர். அப்படி இல்லையென்றால், இன்னும் இரு மாதங்களில் ரிலீசாகவுள்ள ஜவான் படம் அந்த சாதனையை எட்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அட்லீ -ஷாருக்கான் காம்பினேஷனில் உருவாகிவரும் ஜவான் படம் இன்னும் இரு மாதங்களில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜவான் படம்
அட்லீ முதல் முறையாக பாலிவுட்டில் ஜவான் படம் மூலம் இணைந்துள்ளார். முதல் படத்திலேயே பாலிவுட் சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு அட்லீக்கு கிடைத்துள்ளது. விஜய்யுடன் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்த அட்லீயின் ஜவான் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.


Click it and Unblock the Notifications











