Shah rukh khan: உலகின் சிறந்த விஸ்கி விருதை பெற்ற ஷாருக்கான் நிறுவனம்.. அம்மாடியோவ் இவ்ளோ கோடி லாபமா
மும்பை: நடிகர் ஷாருக்கான் பாலிவுட் பாட்ஷாவாக மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் வரவேற்பை மட்டுமில்லாமல் வசூலையும் குவித்து வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டுமே ஷாருக்கான் நடிப்பில் பதான், ஜவான் மற்றும் டங்கி படங்கள் வெளியாகி மாஸ் காட்டின. இதில் பதான் மற்றும் ஜவான் படங்கள் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்து தயாரிப்பாளராகவும் சிறப்பாக கை கொடுத்தன.
இந்நிலையில் நடிப்பு, தயாரிப்பு மட்டுமில்லாமல் மற்ற பிசினஸ்களிலும் தன்னுடைய மகனுடன் இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார் ஷாருக்கான். அவரது தியாவால் ஸ்காட்ச் விஸ்கி நிறுவனத்தை கடந்த ஆண்டில் துவங்கினார். இந்த நிறுவனத்தை தன்னுடைய மகன் ஆர்யன் கானுடன் இணைந்து அவர் நடத்தி வருகிறார். இதனிடையே, அவரது விஸ்கி பிராண்ட் உலக அளவில் சிறப்பான விஸ்கியாக தற்போது தேர்வாகியுள்ளது.

நடிகர் ஷாருக்கான்: பாலிவுட் பாட்ஷாவாக கொண்டாடப்பட்டு வரும் ஷாருக்கான் தொடர்ந்து பல ஆண்டுகளாக கிங் கானாக ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நடிகராக பாலிவுட்டில் கோலோச்சி வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் மிகவும் சிறப்பாக அமைந்துவரும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தன்னுடைய சொந்த பிரச்சினைகள் காரணமாக இவர் நடிப்பில் அதிகமாக கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனிடையே அவை அனைத்திற்கும் சேர்த்து வைத்து கடந்த ஆண்டில் இவரது நடிப்பில் பதான், ஜவான் மற்றும் டங்கி என மூன்று படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இவற்றில் பதான் மற்றும் ஜவான் படங்கள் ஆயிரம் கோடி கிளப்பில் இணைந்திருந்தன.
அடுத்தடுத்த பிசினஸ்: ஷாருக்கானிற்கு தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கடந்த ஆண்டு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. இந்த நிதியாண்டில் மட்டுமே இவர் 92 கோடி வரி செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் மூலம் வரி செலுத்தும் தனி நபரில் நாட்டிலேயே அதிகமாக வரி செலுத்துபவர் என்ற பெருமையையும் ஷாருக்கான் பெற்றுள்ளார். இந்நிலையில் இவர் படங்களில் நடிப்பதுடன் மட்டுமில்லாமல் தயாரிப்பு உள்ளிட்ட மற்ற துறைகளிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அடுத்தடுத்து பிசினஸ்களிலும் தன்னுடைய இன்வெஸ்ட்மெண்ட்டை பெருக்கி வருகிறார்.
பெஸ்ட் விஸ்கியாக தேர்வு: தன்னுடைய மகன் ஆரியன் கானுடன் இணைந்து ஷாருக்கான் தியாவால் என்ற விஸ்கி நிறுவனத்தை கடந்த ஆண்டில் துவங்கினார். 12 ஆண்டுகள் பழமையான இந்த ஸ்காட்ச், குளிர்ச்சி இல்லாமல் மிகவும் சுவையூட்டப்பட்டதாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் இவரது ஸ்காட்ச் விஸ்கி சிறந்த மதுபானமாக தேர்வாகியுள்ளது. தி டேஸ்டிங் அலையன்ஸ் சார்பில் சர்வதேச அளவில் சிறந்த மதுபானங்களுக்கான போட்டி நடத்தப்பட்ட நிலையில் அதில்தான் இந்த ஆண்டிற்கான சிறந்த மதுபானமாக ஷாருக்கானின் ஸ்காட்ச் விஸ்கி தேர்வாகியுள்ளது.
அம்மாடியோ இவ்வளவு லாபமா?: கடந்த ஆண்டில் தான் இந்த தொழிலில் ஷாருக்கான் நுழைந்தார். இருந்தபோதிலும் கடந்த ஆண்டில் மட்டுமே 200 முதல் 300 கோடி ரூபாய் லாபத்தை இந்த தொழில் அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத தகவலாக இருந்த போதிலும் இவ்வளவு கோடி லாபத்துடன் பாராட்டுகளையும் இந்த தொழில் ஷாருக்கான் மற்றும் அவரது மகன் ஆரியன் கானிற்கு பெற்றுக் கொடுத்துள்ளது. இதுகுறித்து ஷாருக்கான் மற்றும் ஆர்யன் கான் இருவரும் தங்களது உற்சாகத்தை பகிர்ந்துள்ளனர்.
விலையை பாருங்க: இந்த விஸ்கி பிராண்டிற்கு ஏற்றபடி 3900, 7200 மற்றும் 4200 என விற்கப்படுகின்றன. சர்வதேச அளவில் மிகப்பெரிய கொண்டாட்டத்துக்குரிய பிரபலமாக ஷாருக்கான் உள்ள நிலை அவரது சொத்து மதிப்பு 7300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே ஷாருக்கானுடன் அடுததடுத்த பிசினஸ்களில் இணைந்துவரும் அவரது மகன் ஆரியன் கானின் சொத்து மதிப்பும் அதிகமாக உள்ளது. சமீபத்தில் மும்பையில் 37 கோடி ரூபாயில் இவர் வீடு வாங்கியுள்ளார். சாதாரண மிடில் கிளாஸ் இளைஞனாக சினிமாவில் நுழைந்த ஷாருக்கான், தொடர்ந்து தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் ரசிகர்களை மிகச் சிறப்பாக கவர்ந்து மிகப்பெரிய ஆளுமையாக பாலிவுட்டில் மாறியுள்ளார். தன்னை அடித்துக் கொள்ள ஆளே இல்லை என்பதாக அவர் வலம் வந்து கொண்டிருக்கிறார்


Click it and Unblock the Notifications











