தடபுடலாக நடந்த கியாரா அத்வானி-சித்தார்த் மல்ஹோத்ரா திருமணம்.. யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

மும்பை : பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானிக்கு இன்று தடபுடலான திருமணம் நடந்து முடிந்தது.

2022ம் ஆண்டு பல திரைப்பிரபலங்களுக்கு சிறப்பான ஆண்டாகவே இருந்தது எனலாம். நீண்ட நாட்களாக காதலர்களாக இருந்த ஆலியா பட் மற்றும் ரன்பீர் கபூர் திருமணம் செய்து கொண்டனர்.

அதேபோல, நயன்தாரா, விக்னேஷ் சிவனை மணந்தார். ஹன்சிகாவும் தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையை தொடங்கி உள்ளார்.

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி

சித்தார்த் மல்ஹோத்ரா - கியாரா அத்வானி

இந்த நட்சத்திர தம்பதிகளில் வரிசையில் தற்போது சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் நடிகை கியாரா அத்வானியும் இணைந்துள்ளனர். நீண்ட நாட்களாக டேட்டிங் செய்து வந்த இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் பேலஸ் ஹோட்டலை இவர்களின் திருமணம் இன்று தடபுடலாக நடந்துள்ளது.

வெளிநாட்டு மலர் அலங்காரம்

வெளிநாட்டு மலர் அலங்காரம்

சங்கீத் மற்றும் மெஹந்தி நிகழ்ச்சிகள் சூர்யாகர் அரண்மனையில் நேற்று நடந்துள்ளன. திருமண விழாவுக்காக ஜெய்சால்மரின் சூர்யாகர் அரண்மனை ஹோட்டலில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு மலர்களால் சிறப்பு மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், அலங்காரம் குறித்த எந்த புகைப்படமும் வெளியாகவில்லை.

100 விஐபிக்கள் மட்டும்

100 விஐபிக்கள் மட்டும்

சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் கியாரா அத்வானி திருமணம் நேற்று நடைபெறும் என்று தகவல் வெளியான நிலையில், இன்று திருமணம் நடந்து முடிந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் திருமணத்தில் 100 விஐபிக்கள் மட்டுமே கலந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. திருமணம் குறித்த ஒரு புகைப்படமாவது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

12ந் தேதி வரவேற்பு

12ந் தேதி வரவேற்பு

மேலும், பிப்ரவரி 12 ஆம் தேதி சித்தார்த்தும் கியாராவும் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதில், பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி ஊடகம் மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்களும் அழைக்கப்படுவார்கள் என்றும் இந்தியா டுடே தெரிவித்துள்ளது.

திருமண ஆடை வடிவமைப்பு

திருமண ஆடை வடிவமைப்பு

ரிஸ்வான் ஷேக், அலி ரிஸ்வி, நகை தயாரிப்பாளர் கமலேஷ் குப்தா, ராஜ் ரங்காவத், மணீஷ் மல்ஹோத்ராவின் உதவியாளர் ஜேசன் டிசோசா ஆகியோர் இவர்களின் திருமணத்திற்கும் இரு குடும்ப உறுப்பினர்களின் ஆடைகளையும் வடிவமைத்துள்ளாக கூறப்படுகிறது. திருமணம் நடந்து பல மணிநேரம் ஆன போதும் தம்பதிகளின் ஒரு புகைப்படம் கூட வெளியாகததால் ரசிகர்கள் புகைப்படங்களை கேட்டு நச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X