வாயால் தூரிகையை வைத்து… சோனு சூட்டை ஓவியமாக வரைந்த தீவிர ரசிகர்… மெர்சலான வீடியோ!

சென்னை : பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையையை கவ்விக்கொண்டு சோனுசூட்டின் முகத்தை வரைந்து உள்ளார்.

தலைகீழாக வரை ஆரம்பித்த அந்த ரசிகர். கலர் கலராக வண்ணமிட்டு இறுதியாக அந்த படத்தை திருப்பி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி அனைவரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.

நிஜத்தில் ஹீரோ

நிஜத்தில் ஹீரோ

பாலிவுட் நடிகரான சோனுசூட் தமிழில் மஜ்னு, ஓஸ்தி,சந்திரமுகி, தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். படத்தில் வில்லாக இருக்கும் இவர், நிஜயத்தில் ஹீரோவாக திகழ்ந்து வருகிறார். இவர் சேவை மனப்பான்மையை பாராட்டி பல மாநிலங்கள் இவருக்கு விருதுகளை அளித்துள்ளன.

பேருதவி

பேருதவி

கொரோனாவின் தாக்கத்தால், கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதிமுதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் சோனு சூட்.

ஆம்புலன்ஸ் விமானம்

ஆம்புலன்ஸ் விமானம்

கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவி இந்த நேரத்தில், சோனு சூட் தன் சேவை பணியை தற்போது தொடர்ந்து வருகிறார். ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த இளம் பெண்ணை உயர் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் விமானத்தின் மூலம் ஹைதராபாத் அனுப்பி அந்தபெண்ணை காப்பாற்றினார்.

30 உயிர்களை காப்பாற்றினார்

அதேபோல, பெங்களுரில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் அவசரமாக தேவைப்படுகிறது என்ற தகவல் கிடைத்ததும் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சிலிண்டரை அனுப்பி வைத்து 30 உயிர்களை காப்பாற்றி உள்ளார். இவரிடம் யாராவது உதவி என்று கேட்டால் மறுக்காமல் உதவி செய்து வருகிறார். இதனால் அவருக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

ஓவியம் வரைந்த ரசிகர்

ஓவியம் வரைந்த ரசிகர்

இந்நிலையில் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர் தன் வாயால் தூரிகையையை கவ்விக்கொண்டு சோனுசூட்டின் முகத்தை வரைந்துள்ளார். அதுவும் தலைகீழாக இருந்து வரைந்துள்ளார். அதற்கு கலர் கலராக வண்ணமிட்டு அசத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஓவியருக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X