எனக்கு விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும்...சோனு சோட் சொன்ன காரணம் என்ன தெரியுமா?

சென்னை: பாலிவுட் நடிகர் சோனு சூட் தனக்கு விஜய்காந்தை மிகவும் பிடிக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

வில்லனாக பல திரைப்படங்களில் நடித்துள்ள சோனு சூட், ஏராளமான படங்களை கைவசம் வைத்துக்கொணடு பிஸியாக நடித்து வருகிறார்.

கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு ஓடி ஓடி இவர் செய்த உதவியால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

Bollywood actor Sonu Sood has said that Vijayakanth is his favorite actor

பாலிவுட் நடிகர் சோனு சூட்: பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் தமிழ், ஹிந்தி மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் அருந்ததி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். குறிப்பாக அனுஷ்கா நடிப்பில் வெளியான அருந்ததி படத்தில் அகோரியாக நடித்து அனைவரையும் மிரட்டி இருப்பார்.

பல உதவி: இவர் நடிகராக பிரபலமானதை விட,கொரோனா காலத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்தார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தியதால் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர். அப்போது தாமாக முன்வந்து, கஷ்டப்பட்டவர்களுக்கு வாகன வசதி, உயிர் காக்கும் ஆக்ஸிஜன் உட்பட அனைத்து உதவிகளையும் சோனு சூட் செய்துகொடுத்தார்.

Bollywood actor Sonu Sood has said that Vijayakanth is his favorite actor

தொடரும் உதவி: கொரோனா காலத்தில் தொடங்கிய சேவையை சோனுசூட் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறார். விடுமுறை நாட்களில் சுமார் 700 பேர் சோனு சூட் வீட்டிற்கு நேரடியாக வந்து உதவி கேட்டு செல்கின்றனர. சமூக வலைதளத்தின் மூலம் 30 முதல் 40 ஆயிரம் பேர் சோனு சூட்டிடம் உதவி கேட்டு தகவல்களை பதிவிட்டு வருகின்றனர். அவர்களுக்கு பல உதவிகளை தவறாமல் சோனு சூட் செய்து வருகிறார்.

பிடித்த நடிகர்: சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சோனு சூட், ரசிகர்களின் பல கேள்விக்கு கலகலப்பாக சுவாரசியமாக பதில் அளித்துள்ளார். அதில் ஒரு ட்விட்டர்வாசி உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள சோனு சூட், எனக்கு விஜயகாந்தை ரொம்ப பிடிக்கும், ஏன் என்றால், எனக்கு தமிழ் சினிமாவில் முதல் வாய்ப்பை கொடுத்தது அவர் தான். கள்ளழகர் படத்தில் அவருடன் நடித்து இருக்கிறேன் என சோனு சூட் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X