ஆபத்தான நிலையில் பெண் கொரோனா நோயாளி… ஆம்புலன்ஸ் விமானத்தை அனுப்பி உதவிய சோனு சூட் !
சென்னை : ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளியை ஆம்புலன்ஸ் விமானத்தில் ஹைதராபாத்திற்கு அனுப்பியுள்ளார் சோனு சூட்.
ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் தற்போது நலமுடன் இருக்கிறார்.
சோனு சூட்டின் இநத செயலுக்கு பலத்தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.

நிஜத்தில் ஹீரோ
பாலிவுட் நடிகரான சோனுசூட் தமிழில் மஜ்னு, ஓஸ்தி,சந்திரமுகி, தேவி ஆகிய படங்களில் நடித்துள்ளார். படத்தில் வில்லாக இருக்கும் இவர், நிஜயத்தில் ஹீரோவாக இருக்கிறார். இவரின் சேவை மனப்பான்மையை பாராட்டி பல மாநிலங்கள் இவருக்கு விருதுகளை அளித்துள்ளன.

பேருதவி
கொரோனாவின் தாக்கத்தால், கடந்த ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. போக்குவரத்து அனைத்தும் தடை செய்யப்பட்டதால் புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றார்கள். அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் சோனு சூட்.

மருத்துவமனை இல்லை
கொரோனாவின் 2வது அலை மிக தீவிரமாக பரவி வருவதால் சோனு சூட் தன் சேவை பணியை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் நாக்பூரைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரது நிலைமை மேலும் மோசமானதால் உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறுவுத்தினர்.

ஆம்புலன்ஸ் விமானத்தில்
அந்த பெண்ணின் குடும்பத்தினர் மருத்துவமனையை தேடி அலைத்தனர். மருத்துவமனை கிடைக்காததால் , சோனுசூட் உதவியை நாடிஉள்ளனர். இதையடுத்து சோனுசூட் தனது சொந்த செலவில் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் விமானத்தின் மூலம் அவரை அனுப்பி உள்ளார். தற்போது அந்த பெண் ஹைதராபாத் மருத்துவமனையில் நலமாக உள்ளார். அவரின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











