அவர் உயிரை காக்க முயற்சி செய்கிறேன்.. 'மன்மத ராசா' மாஸ்டரின் மருத்துவ செலவுக்கு உதவிய சோனு சூட்!

சென்னை: மன்மத ராசா பாடலுக்கு நடனம் அமைத்த சிவசங்கர் மாஸ்டரின் மருத்துவ செலவுக்கு பிரபல பாலிவுட் நடிகரான சோனு சூட் உதவியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர்.

இவர் பல முன்னணி நடிகர்கள் படத்தில் நடன இயக்குனராக்வும், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஃபாஸ்ட் டான்ஸ்

ஃபாஸ்ட் டான்ஸ்

தனுஷ் சாயா சிங் நடிப்பில் வெளியான திருடா திருடி படத்தில் இடம் பெற்ற மன்மத ராசா பாடலுக்கு நடனம் அமைத்தவர் சிவ சங்கர் மாஸ்டர்தான். இந்தப் பாடலின் ஃபாஸ்ட் பீட்டுக்கு ஏற்ப ஃபாஸ்ட்டான நடனத்தை அமைத்து கொடுத்தார்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இதனால் இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டர் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக தகவல் வெளியானது.

இளைய மகன்தான் கவனிக்கிறார்

இளைய மகன்தான் கவனிக்கிறார்

சிவசங்கர் மாஸ்டருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோரும் கொரானாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைய மகன் அஜய் உடனிருந்து மூவரையும் கவனித்து வருகிறார்.

உதவி கேட்ட மகன்

இந்நிலையில் அவர்களின் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் கூறப்பட்டது. சிவ சங்கர் மாஸ்டரின் மகனான அஜய் கிருஷ்ணன் மருத்துவ செலவுக்கு உதவுமாறு சமூக வலைத்தள பக்கத்தில் உதவி கேட்டிருந்தார்.

உதவிய சோனு சூட்

உதவிய சோனு சூட்

இதனை தொடர்ந்து அஜய் கிருஷ்ணாவின் தொலைபேசி எண்ணுடன் பிரபலங்கள் பலரும் உதவி கேட்டு சமூக வலைதளங்களில் போஸ்ட்களை ஷேர் செய்து வந்தனர். இந்நிலையில் சிவ சங்கர் மாஸ்டர் தொடர்பான டிவிட் ஒன்றுக்கு பதில் அளித்துள்ள பாலிவுட் நடிகர் சோனு சூட், தான் அவரது குடும்பத்தினருடன் தொடர்பில்தான் இருப்பதாகவும் அவரது உயிரை காக்க தன்னால் முடிந்த அளவு முயற்சி செய்வதாகவும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X