Don't Miss!
- News மணல் கொள்ளை விவகாரம்.. ED - விசாரணைக்கு 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று ஆஜர்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு சுக்கிர சேர்க்கை: மே மாசம் இந்த 3 ராசிக்கு தொழில் பிரகாசிக்கப் போகுது..
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம், இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வீட்டிலேயே இருங்க…வீடு தேடி நான் வரேன்… சோனுசூட் சூப்பர் மார்க்கெட்!
டெல்லி : பாலிவுட்நடிகர் சோனு சூட் கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து வருகிறார்.
உதவி என்று தன்னை யார் தொடர்பு கொண்டாலும் அவர்களுக்கு தானாக முன்வந்து தயங்காது உதவி செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் சைக்கிளில் சோனுசூட் சூப்பர் மார்க்கெட் ஒன்றை தொடங்கி உள்ளார். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
ஸ்காலர்ஷிப்புடன் இலவச ஐஏஎஸ் கோச்சிங்...கலக்கும் சோனு சூட்
பேரழிவு
கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை ஏப்ரல்,மே மாதங்களில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தின. மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்களுக்கு மிகப்பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவி தற்போது ஓரளவிற்கு சீராகி உள்ளது.
சோனு சூட் பவுன்டேஷன்
நடிகர் சோனு சூட்கொரோனா ஊரடங்குகாரணமாக உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோர்களுக்கு சோனு சூட் பவுன்டேஷன் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். அந்த அமைப்பின் மூலம் உதவி என்று கேட்கும் அனைவருக்கும் தானாக முன்வந்து பல உதவிகளை செய்து வருகிறார்.
உதவினார்
இதேபோல, கொரோனா முதல் அலையின் போதும் ஊரடங்கால் போக்குவரத்து தடை செய்யப்பட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் அனைவரும் நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றார்கள்.அவர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைத்து பேருதவி செய்தார் சோனுசூட்.
குவியும் பாராட்டு
இந்நிலையில், ஊரடங்கால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் சைக்கிளில் பிஸ்கெட், பிரெட், முட்டை மற்றும் மளிகை பொருட்களை வீடு வீடாக சென்று விற்பனை செய்து வருகிறார் சோனு சூட். மேலும், இந்த வீடியோவை தனது இன்ஸ்டா பேஜில் பகிர்ந்துள்ள சோனு சூட், 10 முட்டை வாங்குபவர்களுக்கு ஒரு பிரெட் பாக்கெட் இலவசம் என தலைப்பிட்டுள்ளார். மேலும், இது சோனுசூட் சூப்பர் மார்கெட் என்றும் கூறியுள்ளார். இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.